ஒவ்வொரு விஷயத்திற்கும் நமக்கென்று ஒரு கருத்துக்கள் இருக்கும். அப்படியாக சில விஷயங்களை போகிற போக்கில் சொல்லுகிறேன். பொதுவான விஷயங்களைப் பற்றித்தான்…
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறோம். பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியிருப்பார். பறவைகள் மட்டும்தானா பலவிதம்; மனிதர்களும்தான்.
ஒரு நண்பரிடம் உங்களைப் அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்றுக் கேட்டப்போது… அவர் சிரித்துக் கொண்டே ‘‘இங்க பலமான ஆவிக்குரிய சத்தியங்கள் கிடைக்காது; அதனால் அதற்காக வேறே இடத்திற்கு போகிறேன்’’ என்றார்.
நாம் பல நேரங்களில் வேதாகமத்தை கிரமமாக பின்பற்றி வாசித்து அநேக காரியங்களைக் கற்றுக் கொள்கிறோம்; இருந்தும் பல வேளைகளில் ஒரே விதமாக செய்து கொண்டிருப்போம். —–இந்த மாதம் இதைத்தான் செய்வோம் என்று செய்வோம். உதாரணத்திற்கு ஜூன் மாதம் என்றால், பிள்ளைகள் படிப்பதற்காக முயற்சிகளும், ஜனவரி என்றால் புது வருட கொண்டாட்டம் கொண்டாடுவது என்று செய்து கொண்டிருப்போம். இப்படியாக எல்லா மாதத்திற்கும்தான்.
இதெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்கிறீர்களா என்று கேட்கத் தோணும்.
இவைகளையெல்லாம் உணர்ந்து சிறப்பாக நானும் செய்கிறேன்.
என்ன சொல்ல வரீங்க.
காலண்டரை வைத்துக் கொண்டு இந்தந்த மாதம் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு சிஸ்டம் உண்டு. அது தேவைதான். அதை கிரமமாக கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும். ஆனால், அதை மட்டும் கருத்தாய் இந்த மாதம் இதைச் செய்ய வேண்டும்; அதற்காக ஆயத்தப்படுவது என்று அதை மட்டும் செய்து கொண்டிருப்பது ஒரு சுழலுக்குள் சுற்றிக் கொண்டிருப்பது போன்றாகும். ஊர் பக்கங்களில் செக்கு மாடு சுற்றி வரலாம்; ஊர் போய் சேராது என்று சொல்வார்கள். அதுப் போன்று காலண்டர் கிறிஸ்தவர்களாக மட்டும் இருந்துவிட்டால் மட்டும் ஆண்டவருக்கு பிரியமானவர்களாக இருப்போமா?
பல நேரங்களில் செய்ததைச் செய்து கொண்டிருக்கும் (சுழலில் சுற்றிக் கொண்டிருக்கும்) நாம் வெளிப்புறமான மனிதனில் ஆவிக்குரியவர்களாக தெரியலாம். மற்றவர்கள் மெச்சலாம். ஆனால், உள்ளான மனிதனில் வெறுமையுமாய் விரக்தியுற்றவர்களாய் வாழலாம்.
கண்களை ஏறெடுத்துப் பார்ப்போம். நமக்கு முன்பாக உள்ள உலகத்தின் தேவைகள், நம்முடைய பங்களிப்பு, சமுதாயச்சீர் கேடுகளை களைய நம்முடைய முனைப்பு, தேவனுடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தும் முயற்சிகள், குடும்பமாக சமாதானத்தோடு வாழும் வாழ்க்கை, வேதத்திலுள்ள அதிசயங்களைக் (சங்கீதம் 119:18) காணும் கண்கள், பலமான ஆகாரத்தை (எபிரேயர் 5:12) நாடுகிறவர்களாகவும், இயேசுவை நோக்கி ஓடுகிற ஓட்டத்தில் சிறப்பாக ஓடவும் (எபிரேயர் 12:1), தீர்க்கதரிசன நிறைவேறுதலை ஆராய்கிறவர்களாவும், புத்தியுள்ள கன்னிகைகளைப் (மத்தேயு 25:1) போல் பரிசுத்தம் காத்து ஆயத்தமாக நம்மை சீர்த்து£க்கிப் பார்ப்போம். உள்ளான மனிதனில் ஒவ்வொரு நாளும் (2 கொரி. 4:16) பலப்படுவோம்.
போகிற போக்கில் சொல்லுகிறேன். —-பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்க.
அன்புடன்
யோவான் காந்தி இரா
சுவிசேஷகர்
