சங்கத்தமிழும் சந்திக்கும் வங்ககடலோரம்
சீறிப்பாயும் அலைகள் தாலாட்ட
சிங்காரமாயமைந்த சென்னை நகரியே
கொக்கரித்த கொரோனாவை கண்டு
அகிலமே அடங்கிய வேளை
ஆடாத ஆட்டமெலாம் ஆடினாய்
இடைவெளியை மறந்து
இளக்காரமாய் சிரித்து
இரண்டாமிடத்தை பிடித்தாய்
இன்னும் அடங்கவில்லையென
இன்னுமோரிரண்டுவாரம் ஒட்டுமொத்தமாய் ஒடுங்கப்போகிறாய்-உன்
ஓங்காரம் ஒழியாதோ கொடும்
கொரோனா கோரத் தாண்டவம்
குறையாதோ
பட்டபின்னும் தெளியாதெனில்
பட்டுப்போகும் வாழ்வு
பார் போற்றும் நகரம்
பாழாகும் முன்னே
பக்குவமாய் அடங்கு
பத்திரமாய் வாழு-உடல்
மூன்று வேளை கழுவாவிடில்
மூச்சு முட்டி சாவாய்
மிளகு பூண்டு இஞ்சியென
உணவு உண்டு பிழைப்பாய்
கபசுர குடிநீர் கபமகற்றி
கடுங்காய்ச்சலதை நீக்கும்
கட்டுப்பாடு காத்தால்
கலகலப்பாய் வாழ்வாய்-இனி
காலமெல்லாம் மகிழ-இக்
கொரோனா ஒழியட்டும் என
பிரார்த்தனை செய்யும் உன்
நலம் விரும்பும்
– புதியவன் வியாசர் லாரன்ஸ்…!!!
#vysasarLawrence #PuthiyavanLawrence #CoronaDisappear #TamilChristianInfor #TamilChristian
[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]