Bible Study வேத ஆராய்ச்சி News செய்திகள் spiritual news, ஆவிக்குரிய தகவல்கள் பொதுத் தகவல்கள்

புதிய தமிழக பள்ளி பாட திட்டத்தில் கிறிஸ்துவுக்கு முன் ( கி .மு ) கிறிஸ்துவுக்கு பின் ( கி .பி ) என்று வரலாற்று கால அளவு நிலையை மாற்றி பொது ஆண்டுக்குப்பின் ( பொ .ஆ .பி ) பொது ஆண்டுக்கு முன் ( பொ .ஆ .மு ) என்று குறிப்பிட்டு வெளியிட்டிருப்பது வருந்த கூடியது.

பல நூறு ஆண்டுகளாக பல் வேறு வல்லுனர்கள் சரித்திர ஆய்வாளர்கள் வரலாற்று சான்றுகள் அடிப்படையில் வழக்கத்தில் கொண்டுவந்த ஆதாரத்தை மாற்றியிருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து ஒரு மதம் சார்ந்தவரோ அல்லது ஒரு பகுதியை சார்ந்தவரோ அல்லது ஒரு பிரிவினரை சார்ந்தவரோ இலர். இயேசு கிறிஸ்துவானவர் உலக மக்களை மீட்க வந்த உலக இரட்சகர். இவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழி நடப்போரை கிறிஸ்தவர்கள் என்று சமுதாயம் தான் அடையாளப்படுத்தியது. இயேசு கிறிஸ்து சமயத்தை ஸ்தாபிக்க வந்தவரல்ல, மாறாக வழிகாட்ட வந்தார். இவர் சரித்திர நாயகர் ஆகவேதான் சரித்திர வல்லுனர்கள் சரித்திரத்தை இரண்டாக பகுத்து கிறிஸ்துவுக்கு முன் என்றும் பின் என்றும் குறித்தார்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தியை அறிவிக்கவந்த தேவதூதன் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இரவிலே தங்கள் மந்தையை காத்துக்கொண்டிருந்தபோது அவர்கள் முன் தோன்றி “ பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவிதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்றான். லூக் : 2 : 1 0 – 11.

இயேசு கிறிஸ்து வின் பிறப்பு இப் பூ உலகிற்கு நற்செய்தியாகும். அவர் உலகிற்கு ஒளியாக வந்தார். “ உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” யோவான் : 1:9.
மறு நாளிலே யோவான் இயேசு வை த் தன்னிடத்தில் வரக் கண்டு : இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி, எனக்கு பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான். யோவான் : 1 : 2 9 -3 0. என்று யோவான் ஸ்நானகன் இயேசுவை அறிமுகம் செய்தார் என்று காண்கிறோம்.
இன்னும் பிற சான்றுகளையும் பார்போம்.

குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுருபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும் கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் : 1 : 14 – 16
நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது ; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம் ; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார். – ஏசாயா : 5 3 : 5 -6

சாட்சிகள் :

சமாரியரின் சாட்சி : அந்த ஸ்திரீயை நோக்கி : உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். யோவான் : 4 : 42

இயேசு கிறிஸ்துவின் சாட்சி : அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு : 1 0 : 45
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் திர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கபடுவதற்காகவே அவரை அனுப்பினர். யோவான் : 3 : 1 7

அப்போஸ்தலர் யோவானின் சாட்சி : பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினார் என்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். I யோவான் : 4 : 14

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். I யோவான் : 2 : 2

சாட்சிகளும் சான்றுகளும் இவ்வாறிருக்க அவரை மதத்தின் பெயரால் சிறுமை படுத்துவது அடாதசெயல் ஆகும். இழைக்கப்படும் அநீதிகளுக்கு முற்று புள்ளி வைப்போம். வாழ்க வையகம், ஆமென்.

சுவி.பாபு தா தாமஸ், இராணிப்பேட்டை

Bible Study வேத ஆராய்ச்சி News செய்திகள்

“2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்”

இதில் எல் அளவும் சந்தேகம் வேண்டாம். இது உண்மை தான். அப்படி யானால் அழிவை வேடிக்கை பார்க்கலாமா ? அல்லவே அல்ல. மாறாக இதை எச்சரிக்கையாக கொள்ளவேண்டும். ஏன் சிரியா தேசம் அழியவேண்டும் என்று பார்க்கவேண்டும். அழிவிலிருந்து எப்படி சிரியா மக்களை காப்பாற்றவேண்டும் என்று பார்க்கவேண்டும். அதற்காகவே இது முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது என்று உணரவேண்டும்.

பைபிள் ஒரு மத நூல் அல்ல. கிறிஸ்துவம் ஒரு மதமும் அல்ல. மதம் என்பது ஒரு சாராரை, ஒரு பிரிவினரை அல்லது ஒரு பகுதியினரை அல்லது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். ஆனால் வேதாகமத்தில் / பைபிளில் ஆதியும் உண்டு முடிவும் உண்டு, வரும் காரியங்களும் உண்டு. உலக தோற்றமும் அதன் வளர்ச்சியும், ராஜ்ஜியங்களின் தோற்றமும் வீழ்ச்சிகளும் உண்டு. யாருக்குப்பின் யார்யார் வாழ்ந்தார்கள் என்கிற விவரங்களும் உண்டு.ஆக சரித்திரமும் பூகோளமும் நீதிசாஸ்திரங்களும், போதனைகளும், பின்னடப்பவைகளும், வாழ்க்கை நெறிகளும் அடங்கிய பைபிள் எப்படி ஒரு பிரிவினரை சார்ந்ததாக இருக்கமுடியும்.

அதேபோல கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை அல்லது கிறிஸ்துவின் போதனைகளின் படி நடப்பவர்களை குறிக்கும் சொல்லாடலாகும். இயேசு கிருஸ்து ஒரு பிரிவை சார்தவரா அல்லவே. இயேசு கிருஸ்து உலக ரட்சகர். உலகவாழ் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்கும் பொருளாய் இவுலகில் உதித்த பரம்பொருள் இயேசு கிறிஸ்துவே. ஆக இவரும் ஒரு பிரிவினருக்கு சொந்தமானவரல்ல மாறாக அனைவருக்குமானவர்.

சிரியா தேச அழிவிலிருந்து காப்பாற்ற வழியிருக்கிறது. நிச்சயம் காப்பாற்றமுடியும். அழிவை முன்னறிவித்த அதேவேதகமத்தில் அழிவிலிருந்து காக்கக்கூடிய வழியும் இருக்கிறது.

– பாபு டீ தாமஸ்

News செய்திகள்

எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்: சங்கீதம் : 122 : 6

இஸ்ரேல் தலை நகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவுக்கு உலகநாடுகள் கண்டனம். நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏன்? ஜெருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளவேண்டும். ஏன் ? உலகநாடுகள் கண்டன குரல் எழுப்பவேண்டும். இதன் ஆரம்பம் தொன்றுதொட்டு இருக்கும் தொடர்கதை. அது பெருங்க்கதை. இப்போது வேண்டாம். 1948 இஸ்ரேல் பிரகடனத்திற்கு பின் முளைத்ததுதான் இந்த தீராத பிரச்சனையின் மூலகாரணம்.

இஸ்ரேல் தலையெடுத்த மறுகணமே அதன் தலையினை கொய்ந்துவிட கூட்டணி அமைத்து எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகள் போர்தொடுக்க, விளைவு ! மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசமானது. 1948 க்கு பிறகு மீண்டும் 1967 இல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகரமாக அறிவித்தது. இங்கே தான் பிரச்சனை. ஆகாத மருமகள் மண்சட்டி உடைத்தாலும் அது பொன் சட்டி அல்லவா, இதே கதை தான் இங்கும். பொதுவாக போரில் கைப்பற்றிய இடங்கள் கைப்பற்றிய நாட்டுக்கு சொந்தம், இது தான் உலக வழக்கம். இஸ்ரேலும் அதை தான் செய்தது. நாட்டாண்மைக்காரர்கள் பொருந்தாது என்கிறார்கள். ஆகவே உலகநாடுகளுக்கு ஒத்துபோகநினைத்து ஐக்கிய நாடுகள் சபையும் மல்லுக்கு நிற்கிறது. இந்த நாட்டாண்மைக்காரர்களின் தலையே நம்ப பெரியண்ணன் அமெரிக்காதான்.

இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களுள் ஒன்று யூத, இஸ்லாமியா மற்றும் கிறிஸ்துவர்களின் பொது இடம் என்பது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இம் மூன்று பிரிவினருக்கும் ஆபிரகாம் தகப்பன். சரி இது ஒருபுறம் இருக்கட்டும். மற்றோரு காரணமாக பார்க்கப்படுவது 3 00 000 பாலஸ்தீனியர்கள். இதிலும் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த மூன்று லட்சம் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேல் குடிமக்களோ அல்லது ஜோர்டான் நாட்டு குடிமக்களோ இல்லை என்பதுதான். இவர்கள் நாடற்ற குடிகளாக இருந்தவர்கள். இப்போதும் அப்படியே தான் குடியுரிமை இல்லாதவர்களாக வாழுகிறார்கள். உலக நாடுகள் பஞ்சாயத்து செய்ய பார்க்கிறது. எதோ தம்பிரான் புண்ணியம் போல அமெரிக்க விழித்துக்கொண்டது அதன் அதிபரால்.

Evg. பாபு டீ தாமஸ்

Pray for Jerusalem’s peace.

News செய்திகள்

EGYPT COPTIC CHRISTIANS KILLED IN IRAQபெப்ருவரி 12, 2015 அன்று எகிப்தை சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர்கள் 21 பேரை லிபியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி கடற்கரையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது உலகின் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இறுதி வரை கிறிஸ்துவை மறுதலியாமல், தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்று, இரத்த சாட்சியாக மரித்த இந்த 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு சவால் என்றால் அது மிமையாகாது.

மத சுதந்திரத்துக்கு இந்தியாவிலும் அச்சுறுத்தல் பெருகி வரும் இக்கால கட்டத்தில், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமையும், அன்பும், பரிவும், கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமும் நாளுக்கு நாள் பெருக வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஜெபத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

News செய்திகள்

அரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயம் இடித்து தள்ளப்பட்டது.
ஹிசார் அருகே கைம்ரி கிராமத்தில் கட்டப்பட்டு வந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை கும்பல் ஒன்று சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை அங்கு வைத்து சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வில்லிவார்ஷ் கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த் அளித்த புகாரில், சிலுவையை எடுத்து விட்டு அனுமன் சிலை மற்றும் கடவுள் ராமரின் கொடியை அங்கு வைத்து விட்டு சென்ற கும்பல், தன்னை கொன்று விடுவதாக மிரட்டி சென்று விட்டனர் என கூறியுள்ளார்.  அங்கிருந்து சில பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு அவர்கள் சென்று விட்டனர் என்றும் கூறப்படுகிறது.
செய்தி வெளியிடப்பட்ட நாள் : 16-3-2015