அன்பான சகோதர, சகோதரிகளே,

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு நோக்கத்திற்காக, சரித்திரம் படைப்பதற்காக, போட்டிகளில் வெற்றி அடைவதற்காக , தாங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைப்பதற்காக பலமுறை நீங்கள் முயற்சி செய்திருக்கலாம். அதில் ஒன்று கூட தாங்கள் நினைத்தபடி வெற்றி கிடைக்கவில்லையே என்று நீங்கள் ஏமாந்து போயிருக்கலாம் (அல்லது) விரக்தி ஏற்பட்டிருக்கலாம். நம்முடைய கண்களுக்கு முன்பாக மற்றவர்கள் வெற்றி பெற்றதை பார்க்கும்போது நம்முடைய இருதயம் நொந்து போயிருக்கலாம். இந்த தோல்வி மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையிலும் எந்த ஒரு காரியத்திலும் உங்களுக்கு தோல்வியே ஏற்பட்டிருக்கலாம்.
இதனால் உங்களுக்கு சமாதானம், சந்தோஷம், உணவு, உறக்கம் இவற்றில் ஒன்று குறைந்தாலும் உடல் நலம் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. இதற்காக பல வழிகளை தேடியிருக்கலாம். பலரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனாலும், அந்த வழிகளும், அந்த ஆலோசனைகளும் கைகூடாமல் போயிருக்கலாம். மற்றவர்கள் உங்களை உதாசினப்படுத்தியிருக்கலாம். உங்களை வெறுத்து, உங்களைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி, உங்களை வேதனைப் படுத்தியிருக்கலாம். இப்படியான சூழ்நிலையில் நீங்கள் தவிக்கும் போதும், தடுமாறும் போதும், உங்களை காப்பாற்ற, உங்களை கை தூக்கி விட, உங்களை காப்பாற்ற ஒரே ஒரு தெய்வத்தால்தான் முடியும் என்பது நிச்சயம். அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
ஏற்கெனவே மேலே சொல்லியிருக்கிற காரியங்களில் சிக்கி கொண்டிருப்பவர்களை விடுதலை கொடுக்கும்படி இயேசு கிறிஸ்து பூமியிலே மனிதராகி வந்தார். அவர் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார் (மத்தேயு 11:28). தலை மேல் சுமக்கிற பாரமல்ல. உங்கள் இருதயத்திலே வேதனையோடும், சஞ்சலத்தோடும், கண்ணீரோடும், கவலையோடும் இருப்பவர்களைத்தான் இயேசுகிறிஸ்து இப்படி சொல்லியிருக்கிறார். ஆகவே அன்பான சகோதர, சகோதரிகளே, கலங்காதேயுங்கள், பயப்படாதேயுங்கள். உங்கள் நம்பிக்கையையும், உங்கள் விசுவாசத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது வைத்து விடுங்கள். அவர் உங்களை காப்பாற்ற உங்களுக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்க அவர் உயிரோடும் இருக்கிறார். ஆகவே அன்பான சகோதர, சகோதரிகளே, இந்த அருமையான சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் ஒன்று மட்டும் சொல்ல வேண்டிய காரியம். இயேசுவே என்னை இரட்சியும் என்று உங்கள் இருதயத்தின் ஆழத்தில் இந்த இயேசுவை நோக்கி நீங்கள் சொன்ன மாத்திரத்தில் உங்கள் இருதயத்திற்கு உண்மையான மகிழ்ச்சி, சந்தோஷம், சமாதானம், சுகம் நிச்சயமாக உங்களுக்கு கொடுப்பார் என்பது அதிக நிச்சயம்.
பைபிள் சொல்கிறது மத்தேயு 24:25 வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.