counseling spiritual news, ஆவிக்குரிய தகவல்கள் Vertical Thoughts - மேலான எண்ணங்கள்

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; – சங்கீதம் 37:34

Bible Study வேத ஆராய்ச்சி counseling health

stress கூட்டுக் குடும்பம் சிதைந்து இன்றைய சிறிய குடும்ப அமைப்பினால், மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. மேலும், கணவன், மனைவி வேலைக்குச் செல்வதும் மனஅழுத்தத்திற்கு மற்றொரு காரணமும் ஆகும். இன்றைய வாழ்க்கை முறையும் குடும்பத்தில் மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளது. உலகமயமாக்குதலினாலும், புதிய பொருளாதாரக் கொள்கையினாலும், பரபரப்பான வாழ்க்கை முறையாகிவிட்டது இன்றைய வாழ்க்கை. இதனால், வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பேசிக் கொள்ள முடியாத நிலையில் பிஸியாக எல்லோரும் உள்ளனர். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பிஸியாக உள்ளனர். காரணம், இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள அனைவரும் பிஸியாக உள்ளனர். இதனால் மனஅழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.

வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் கவலை

பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற கவலை வீட்டின் ஆண்களுக்கு; குறைவான பொருளாதாரத்தில் சமாளிக்க வேண்டும் என்ற கவலை வீட்டின் பெண்களுக்கு; படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக படி படி என்ற அழுத்தம் சிறுவர் சிறுமியர் முதல் வாலிபர்களுக்கு; படித்த வாலிபர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை; தங்களை கவனிப்பதில்லை என்ற கவலை பெரியவர்களுக்கு. இந்த கவலைகளினால் இன்றைய குடும்பங்களில் அனைவருக்குள்ளும் மனஅழுத்தம் காணப்படுகின்றன.

மனஅழுத்தம் அதிகரிப்பதனால் ஏற்படும் விளைவுகள்

மனஅழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு விடியல் தேட தொலைக்காட்சி முன் அமர்ந்தால் எப்போதாவது நல்ல நிகழ்ச்சிகள் காட்டப்படுவதுண்டு. ஆனால், பெரும்பாலும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் வன்முறையைத் தூண்டும் காட்சிகளைக் காட்டி நம் மனஅழுத்தத்தை மேலும் அதிகரித்து விடுகிறது. அக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைகள், கோபங்கள் மறைமுகமாக நம் மனதில் பதிந்து நம் குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட வழி வகுக்கிறது. விடியல் இங்கு அஸ்தமனமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சீரியல்களில் பெரும்பாலும், குடும்பத்தில் சண்டைகள், தகாத உறவுகள், மூர்க்க தனமான எண்ணங்களையுடைய சூழ்ச்சி சதிகள், நாணயமற்றதன்மை, பொய்யான பணக்காரத்தனம் என்று பல பலக் காட்டப்படுகிறது. இதுதான் உண்மையென்று எண்ணும் அளவிற்கு ஜோடித்துக் காட்டப்படுகின்றன. இதனால், நம் வீட்டிலும் பல போலித்தனத்திற்கு அடிகோலுகிறது. மனஅழுத்தமும் அதிகரிக்கின்றது.

பணமும் மூலக்காரம்

பணம் பணம் என்று இந்த உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. நாமும் எவ்வகையிலாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் உள்ள வருவாயிட்டுவோர் மனதில் இருப்பதினால், இன்றைய வியாபாரத்திலும், சம்பாதிப்பதிலும் உண்மையிருப்பதில்லை. கலப்படம், அளவு குறைத்தல், லஞ்சம், சீக்கிரத்தில் சம்பாதிக்கும் முறைகள் என்று வேறு வழிகளில் செல்ல வேண்டிய நிர்பந்தம். இதனால் மனஅழுத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இதை வாசிக்கும் நண்பர்களே! இதே சூழ்நிலையில் நீங்களும் இருக்கின்றீர்களா? மனஅழுத்தினால் சோர்ந்து போயிருக்கிறீர்களா? மனஅழுத்தத்தினால் விரக்தி ஏற்பட்டு கவலை, கோபம் என்று எரிச்சலுடன் வாழ்க்கை நடத்தும் பலர், என்ன வாழ்க்கை இது! பேசாமல் செத்துச் தொலைக்கலாம் என்று நினைப்பதுண்டு. மனஅழுத்த மிகுதியினால் பலர் தற்கொலை செய்து கொள்வதுண்டு. சமீபகாலமாக வியாபார நஷ்டத்தினால், அநேக கடனிமித்தம் பலர் தற்கொலை செய்ததை நாம் தினசரி நாளிதழ்களில் படித்ததுண்டு. மனஅழுத்தம் குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கும். நல்லுறவினைப் பாதிக்கும்.

இதோ வழி

ஆதலால், மனஅழுத்தத்தினின்று நாம் கண்டிப்பாக விடுபடவேண்டும். அதற்கு நல்ல வழியுண்டு.

வேதம் காட்டும் வழியில் நாம் நடந்தால், அதிலிருந்து நாம் விடுபட முடியும். இயேசு இந்த உலகத்திலிருந்து பரத்திற்கு போகும் முன்பு நமக்கு சமாதானத்தை வைத்து போவதாக (யோவான் 14:27) கூறினார். அப்படியானால் நாம் அந்த சமாதானத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. ஒரு வேளை நாம் மனஅழுத்தத்தில் இருந்தால் நாம் மனஅழுத்தத்தை தெரிந்தெடுத்தோம் என்று அர்த்தம். இயேசு வைத்துப் போன சமாதானத்தை நாம் தேர்தெடுக்க வில்லை என்று அர்த்தம். “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள் (ஏரேமியா 2 : 13). இந்த சூழ்நிலை நம்முடைய இன்றைய நிலைமையை சரியாக காட்டுகிறது அல்லவா! நாம் கர்த்தரைத் தெரிந்து கொள்ளாமல் வெடிப்புள்ள உலகப்பிரகாரமான வெடிப்பு தொட்டிகளை நாடி ஓடி மனஅழுத்தத்தினால் நிறைந்திருக்கிறோம்.

இன்று கர்த்தர் நம்மை ஜீவத்தண்ணீராம் அவரண்டை அழைக்கிறார். நாம் அவரிடத்தில் வந்தால் அவர் நம்முடைய பாரங்களை சுமப்பார். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! என்னிடத்தில் வாருங்கள் என்று நம்மை இயேசு அழைக்கிறார். மேலும், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றும் வாக்களித்திருக்கிறார் (மத்தேயு 11 : 28). நாம் அவரை தேர்ந்தெடுப்போமா? அவர் வைத்துப் போன சமாதானத்தை நாம் எடுத்துக் கொள்வோமா?

மனஅழுத்தத்திலிருந்து விடுபட பரிசுத்த வேதாகமம் காட்டும் வழிகள்
  1. முதலாவது நாம் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியை நாம் தேட வேண்டும். அப்பொழுது நம்முடைய தேவைகளை தேவன் சந்திப்பார்.
  2. நம் கண் முன் நிறுத்தியிருக்க வேண்டியவைகள் தேவனுடைய வசனத்தையே. உலகப்பிரகாரமான மாயையான டிவி பணம் போன்றவற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்.
  3. பண ஆசையை கொண்டு சம்பாதிக்காமல் கர்த்தர் வழியில் பணமும் உலகத்திலுள்ள அனைத்தும் கர்த்தருடையதென்று உணர்ந்து போதுமென்கிற மனதுடன் நாம் சம்பாதித்தால் தேவன் நம் வருவாயை ஆசீர்வதிப்பார். காரணம், பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. ஆனால் பணம் நம் வாழ்க்கைக்கு தேவை. அது நமக்கு தேவையை சந்திக்க போதுமென்கிறவகையில் (மனதுடன்) சம்பாதிக்க வேண்டும்.
  4. நம் கவலைகளெல்லாம் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து நாம் கர்த்தருக்குள் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும் சிற்பிகளில் ஒருவன்,

(இரா. யோவான் காந்தி)

நங்கூரம் தலைமைத்துவ ஊழியங்கள்
Mobile : 98408 72799

Yovan

R. Yovan Gandhi, Evangelist, lives in Chennai, India

Bible Study வேத ஆராய்ச்சி counseling

பெற்றோர் இல்லாத வீட்டில் தங்களின் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படுகிறவர்களைக் கேட்டுப்பாருங்கள் “பெற்றோர் மிகவும் அருமையானவர்கள்” என்று கட்டாயம் சொல்லுவார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் பெரியவர்கள் இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசம் தான்.

பெலன் உள்ளவரை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பலவிதங்களில் உதவிகள் செய்கிறார்கள். வீட்டின் பொருட்களை அதனதின் இடத்தில் வைப்பது, அவசர நேரத்தில் பக்கத்து கடைக்கு சென்று பொருள் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளுக்கு தேவைப்படும் பல்வேறு உதவிகள், சமையலில் சிறு சிறு உதவிகள், ஓய்வுதியம் வாங்கினால் ஒரு பங்கினை கொடுத்து உதவுவது, பிள்ளைகள் இல்லாத நேரத்தில் பொறுப்பாக வீட்டை பார்த்துக் கொள்வது என்று பல்வேறு விதங்களில் கலக்குகிறார்கள். பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். இவைகளை செய்வதற்கு பெரியவர்களுக்கு நேரம் நிறைய உண்டு, ஆனால் பெலன் குன்றும் போது, வயது அதிகரிக்கும் போது பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. அப்போது அதே பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பாரமாக தோன்றுகிறார்கள்.

பண உதவியோ, வேறு உதவிகளோ செய்ய இயலாத பெற்றோரை இன்றைய சந்ததி எந்த அளவு மதிக்கிறது? கவனிக்கிறது? போற்றுகிறது? என்பதை சற்று அலசிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

elders_1தனியாக உட்கார்ந்து ஒரு நாள் யோசித்துப்பாருங்கள். நீங்கள் இவ்வுலகில் நீங்கள் பிறந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எப்படி இருக்கும்? வாய்ப்பே இல்லை. நீங்கள் அழுதீர்கள். உங்கள் அம்மா தன் இரத்தத்தையே உருமாற்றி உங்களுக்கு உணவாக கொடுத்தார்கள். அப்பா அம்மா இரவெல்லாம் கண்விழித்து உங்களை கவனித்துக் கொண்டார்கள். கடினமாக உழைத்து உங்களை போஷித்தார்கள், நீங்கள் சிரித்த போது அவர்களுகும் சிரித்தார்கள். நீங்கள் அழுதபோது அவர்களும் வேதனைப்பட்டார்கள். உங்களை வளர்த்து ஆளாக்குவதற்கு தங்களால் ஆன எல்லா பிரயத்தனங்களையும் செய்தார்கள். உங்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி, நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்கள். அல்லது நீங்கள் விரும்பினவரை சுற்றுமும் நட்பும் எதிர்த்தாலும் உங்களுக்காக மணமுடித்துக் கொடுத்தார்கள். அப்படித்தானே!

ஓல்ட் ஏஜ் ஹோம்! பெற்றெடுத்த பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு அல்லது வேதனை தாங்க முடியாமல் தாங்களாகவே வேறு வழியின்றி வந்து தங்கிடும் இடம் தான் முதியோர் இல்லம். முதியோர் இல்லங்களில் கிறிஸ்தவ பெற்றோர்களை காணும் போது நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று தோன்றுகிறது.

கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்கிறது. சற்று கவனிப்போமா?

உபா-5:16 உன் தேவனாகிய கர்த்தர்; உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும் உன் தேவனாகிய கர்த்தர்; உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

நீதி-20:20 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காலீஜீருளில் அணைந்துபோம்.

பிரியமானவர்களே, நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு உதவி செய்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்து நாம் அவர்களை மதித்து நடத்துவது தவறானது. ஒருவேளை அவர்கள் சிறிய தவறுகள் செய்தாலும், சற்று அதிகமாக பேசினாலும் பொறுத்துக்கொள்ளலாமே!. பெற்றோரோடு நேரம் செலவிடுங்கள், மனம் விட்டு பேசுங்கள், அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள். திடிரென ஒரு நாள் அவர்கள் நம்மை விட்டு கடந்து போய்விடுவார்கள். அதன்பின் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.

counseling

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். – நீதி. -21:31

Exam_Timeதேர்வுக்கு ஆயத்த நாட்களில்… செய்ய வேண்டியவை

  • உங்கள் ஆயத்த நேரத்தை ஜெபித்து துவங்கவும். உங்கள் பரலோக அப்பாவிடம் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்து சந்தோஷத்துடன் உங்கள் படிப்பின் ஆயத்தங்களை ஆரம்பியுங்கள்.
  • அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து படிக்கவும்.
  • நீங்கள் படிக்கும் பாடத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும், உபகரணங்களையும் பக்கத்திலேயே வைத்திருங்கள்.
  • ஏற்கெனவே படித்த பகுதியை ஒருமுறை புரட்டிப் பார்த்து விட்டு, பின்னர் மற்ற பகுதிகளை படியுங்கள்.
  • ஒரு பாடத்தை எவ்வளவு நேரம் படிக்கப்போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள் (2 அல்லது 3 மணி நேரங்கள்).
  • உங்கள் அருகில் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு மணிக்கும் பிறகு ஒரு ஐந்து நிமிடம் இடைவேளை உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளுங்கள். இந்த இடைவேளையில்… கொஞ்சம் நடக்கலாம்… அமைதியாக இருக்கலாம்… படம் வரையலாம். ஏதாவது ஒரு மாற்று பொழுது போக்கை உபயோகிக்கலாம்.
  • சரியான நேரத்தில் (காலை, மதியம் மற்றும் இரவில்) அளவு சற்று குறைவாக சாப்பிடுவது நல்லது.
  • காலையில் எழுந்து படிப்பது மிகவும் நல்லது.
  • படிக்கும் போது சோர்வாக இருந்தால் ஐந்து நிமிடம் குட்டி தூக்கம் போடுவது தவறில்லை.

தேர்வுக்கு ஆயத்த நாட்களில்… செய்ய வேண்டாதவை

  • படுத்துக்கொண்டு படிப்பதை தவிர்க்கவும்.
    ¤ ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு படிக்க வேண்டாம். தூங்கி விடுவீர்கள்.
  • நாளை பரிட்சை என்றால், இன்று குரூப் ஸ்டடி வேண்டாம்.
  • தொலைந்து போன குறிப்பையோ, வேறு புத்தகத்தையோ தேடிக்கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
  • தெரியாத, புரியாத பகுதிகளில் குழம்பிப்போய் நேரத்தை வீணாக்க வேண்டாம். ஏற்கெனவே தெரிந்த பகுதிகளை இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
  • ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே படிப்பதை தவிர்க்கவும்.
  • இரவு வெகுநேரம் கண்விழித்து படிக்க வேண்டாம். அது காலையில் நீங்கள் ஃப்ரெஷ் ஆக இல்லாதபடி செய்து விடும்.
  • பரிட்சை அன்று காலை உணவு லைட்டாக இருக்கட்டும். ஓவராக சாப்பிட்டாலோ, எண்ணெய் அதிகம் சேர்த்து சாப்பிட்டாலோ பரிட்சை ஹாலில் தூக்கமும், தண்ணீர் தாகமும் அடிக்கடி ஏற்படும்.

தேர்வு சமயத்தில்… செய்ய வேண்டியவை

exam_tips

  • ரிலக்ஸாக இருங்கள். பதட்டம் தேவையே இல்லை. மனதில் ஜெபித்து விட்டு கேள்வித்தாள் மற்றும் பதில்களை எழுதும் புத்தகத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
  • கேள்வித்தாளை ஒருமுறை முழுவதும் படியுங்கள்
  • பதில்களை எழுதும் புத்தகத்தில் உள்ள தகவல்களை கவனமாக வாசித்து, நிரப்ப வேண்டிய இடங்களை சரியாக நிரப்பவும்.
  • எந்த கேள்விக்கு பதில் எழுதுகிறீர்களோ, அந்த கேள்வி எண்ணை சரியாக எழுதிவிட்டு பின்னர் பதிலை எழுதவும்.
  • முதலாவது தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதவும்
  • மிக கடினமான கேள்விகளை கடைசியாக எழுதவும்.
  • பக்கங்களுக்கு எண் இட தவற வேண்டாம்.
  • எல்லா துணை தலைப்புகளையும் கோடிடவும் (கோடு போட பென்சில், பேனா, ஸ்கெட்ச் எது உபயோகிக்கலாம் என்பதை உங்கள் ஆசிரியரிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்ளவும்)
  •  மார்ஜின் விட்டு எழுத மறக்க வேண்டாம்.
  • படம் வரைந்து பாகங்கள் குறிக்கும் போது வலது பக்கமாக அழகாக எழுதி குறிக்கவும்.
  • கணித பரிட்சையில் பதில் தாளின் கீழ் பகுதியிலோ, வேறு எங்கு அனுமதி உண்டோ அங்கே ரஃப் ஒர்க் செய்யவும்
  • மேப் உபயோகிக்கையில் கலர் பென்சிலை பயன்படுத்தவும்
  • க்ரஃப் வரையும் போது அளவுகளை எழுத மறக்க வேண்டாம்.
  • உங்கள் சொந்த ஜாமட்ரி பாக்ஸையே உபயோகிக்கவும்.
  • தேவைபட்டால், அனுமதி கிடைத்தால் லாக்புக் உபயோகிக்கலாம்.
  • கலர் பென்சில் மற்றும் ஸ்கெட்ச் பென்ஸ் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும்.
  • குறைந்தது இரண்டு பேனாக்களாவது வைத்திருங்கள்.
  • அனுமதித்தால் ஒரு தண்ணீர் பாட்டிலை கூடவே வைத்திருங்கள்
  • உங்கள் கேள்வித்தாள் அழகாகவும், தெளிவாகவும் இருக்கும் பட்சத்தில் திருத்துபவர்கள் மனதில் நல்ல எண்ணம் உருவாகும்.
  • சீக்கிரம் முடித்து விட்டால், மீண்டும் எல்லா பதில்களையும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். ஏதாவது கேள்வி விடுபட்டிருந்தால் தெரிந்த தகவல்களை எழுதவும்.
  • பரிட்சை எழுதி முடித்த பின்னர் எல்லா தாள்களையும் பக்கம் மாறாமல் அடுக்கி, நூல் கட்டி சிறிய ஜெபம் செய்து விட்டு, ஆசிரியரிடம் கொடுத்து சீக்கிரமாக ஹாலை விட்டு வெளியேறவும்.

தேர்வு சமயத்தில்… செய்ய வேண்டாதவை

success

  • பரிட்சை ஹாலுக்கு வெளியே நின்று கொண்டு வேகம் வேகமாக பாடங்களை புரட்டிப் பார்ப்பது நல்லது அல்ல. அது உங்களை குழப்பி விடும். படித்த பாடங்களும் மறந்து விட்டதைப்போன்ற உணர்வு நேரிடும்.
  • பரிட்சை ஹாலுக்குள் கேள்வித்தாளை பெற்ற பின் உங்கள் நண்பர்களையோ, வேறு யாரையும் பார்க்க வேண்டாம். உங்கள் வேலையை ஆரம்பியுங்கள்.
  • ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், வேறு யாரிடமும் கேட்பதையோ, மற்றவர்களை தொந்தரவு செய்வதையோ செய்யக் கூடாது.
  • ஹாலின் ஆசிரியரிடம் ஏதாவது கேட்க வேண்டுமானால் கைகளை உயர்த்துங்கள். கூச்சிலிட வேண்டாம்.
  • உங்கள் பதில் தாள்களில் கடவுள் நாமத்தையோ, அடையாள குறிகளையோ போட்டு ஆரம்பிப்பது நல்லது அல்ல.
  • பதில் தாள்களில் தேவையற்ற கிறுக்கல்களை தவிர்க்கவும்.
  • பக்கத்தின் எண்களையோ, கேள்வியின் எண்களையோ குழப்பி, தவறுதலாக மாற்றி எழுதிவிட வேண்டாம்.
  • உங்கள் சொந்தக்கதைகள், வாழ்க்கையின் சோகக் கதைகளை (ஐயா எனக்கு மார்க் தாருங்கள், ப்ளீஸ் என்பன போன்றவற்றை) எழுத வேண்டாம். அது நல்லது அல்ல. ஆபத்து!)

தேர்வு முடிந்த பிறகு… செய்ய வேண்டியவை

  • நீங்கள் எழுதியவைகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்
  • நேராக வீட்டுக்கு செல்லுங்கள்.
  • காலையில் பரிட்சை முடிந்து விட்டால், வீட்டுக்கு சென்று, சிறிது நேரம் தூங்கி விட்டு அடுத்த நாள் பரிட்சைக்கான ஆயத்தங்களை துவங்கவும். மாலையில் பரிட்சை என்றால் பரிட்சை எழுதி வீட்டுக்கு வந்து சிறிது ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் அடுத்த நாள் தேர்வுக்கான ஆயத்தங்களை துவக்கவும்.

தேர்வு முடிந்த பிறகு… செய்ய வேண்டாதவை

  • தேர்வு ஹால் அருகிலேயே நின்று கொண்டு உங்கள் சக மாணவர்களிடம் அன்றைய தினத்தின் கேள்விகளுக்கான பதில்களை ஆராய்ச்சி செய்வதை அறவே தவிர்த்து விடுங்கள். அது உங்களை திசை திருப்பி விடும்.

ஜெ. சாம்ராஜ் ஹாப்பர்
போதனை மற்றும் பயிற்சி ஊழியங்கள்
Teaching & Training Mission
Mobile : 98410 40205

samraj Samraj Hopper