counseling health

கரோனா வைரஸ் எனப்படும் COVID19, மனிதனை உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொடிய வியாதிகளில் ஒன்று வேகமாக பரவி, மரண பயத்தில் மனிதனை வைத்திருக்கிறது. இது ஒரு கொடிய தோற்று வியாதியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்றைக்கு உலகில் அநேகமாக எல்லா நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை இந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கிறது, அதே சமயம் இந்த தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகிறது. பல வளர்ந்த மற்றும் முன்னணி நாடுகள் இந்த வைரஸ் தொற்றினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பாக சைனா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, இரான், அமெரிக்கா, ஸ்பெயின், எகிப்து, ஜெர்மனி என்று பட்டியல் நீள்கிறது ஒரு பெரும் அச்சத்திற்கு காரணம். இந்த வரிசையில் இந்தியாவும், 147 நோய் தொற்றியோர் எண்ணிக்கையுடன் ,அடங்கும்.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க அரசாங்கங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அவ்வகையில் மக்களை சுகாதார துறை அறிவுறுத்தும் வைரஸ் தடுப்பு குறிப்புக்களில் முக்கியமானவை கை கழுவுதல், முகக் கவசம், கையுறை அணிதல் ஆகும். இதன் மூலம் வைரஸ் மனிதர்களிடையே பரவுவதை இயல்பாகத் தடுத்து விட முடியும் என்று அரசு நம்புகிறது. இதோடு நில்லாமல் பொது வெளியில் ஆறு அடி இடைவெளி அவசியம் என்றும் கண், மூக்கு, வாய் பகுதிகளை தங்கள் கைகளால் தொடுவதை தவிர்ப்பது போன்ற விதி முறைகள் மிஞ்சுவதையும் கேட்க முடிகிறது. அப்படியானால் இந்த தடுப்பு முறைகள் நமக்கு உணர்த்துவது தான் என்ன? பொதுவாக வைரஸ் ஆயுள் காலம் மிக குறைவாக இருக்கும். வெளிப்புற சீதோஷ்ண நிலையில் அவைகள் உயிர் வாழ்வது கடினம் போன்ற நிலைகள் மாறி, இன்று நாள், வாரக்கணக்கில் கரோனா வைரஸ் வாழக்கூடிய நிலை வந்திருக்கிறது என்றால், நாம் சுவாசிக்கும் காற்றின் மாசு எவ்வகை எத்தகையது என்பது புரியும். நம் கால் நம் கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்களை தொடுவதே ஆபத்து எனும் அவல நிலை எத்துனை அபாயகரமானது.

இன்றைக்கு இந்த கரோனா வைரஸ்சின் தீவிரம் பயங்கரமாய் இருப்பதற்கு காரணம் 1. காற்று மாசு 2. உணவில் கலப்படம் 3. மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இன்மை. ஆக இந்த மூன்றே முக்கிய மூலக்காரணம். இந்த மூன்று காரணிகளுக்கான காரணத்தை களைவதற்கான முனைப்பில் நமோ, நமது அரசோ இன்று இல்லை. நாம் அனைவரும் எப்போதும் காரியத்தில் மாத்திரம் கண்ணாய் இருப்போம். இது தான் நமது தொன்று தொட்ட வழக்கம். இதில் நமக்கு நிரந்தர தீர்வுக்கு வழியில்லை. நேற்று ஒன்று இருந்தது, இன்று ஒன்று இருக்கிறது, நாளை ஒன்று வரும். நமக்கோ நேற்றைய குறித்த வருத்தம் இல்லை, நாளைய குறித்த கவலையும் இல்லை. நாம் அனைவரும் இன்றைக்காக மட்டுமே வாழ்கிறோம். நம் அனைவருக்கும் தேவையான ஒரு குணம் நேற்றைய குறித்த வருத்தம், அதினால் நாம் பாடம் கற்கிறோம். அதேபோல நாளைய குறித்த கவலை நமக்கு அச்சத்தையும் நம்பிக்கையையும் தருகிறது அதினால் இன்றைய வாழ்க்கையை நாம் சீர்படுத்தி சிறப்பாய் வாழ முயற்சிப்போம். அதுவே சிறப்பான வாழ்க்கையாக முடியும்.

காற்று மாசு :

இந்த கரோனா வைரஸ்சின் முக்கிய அவையவம் பாதிப்பு நுரையிரல். ஆனால் அதே நேரத்தில் வைரஸ்சின் ஆயுட் காலம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நம் சுற்றுச் சூழலின் அவல நிலை எப்படி என்பது வெட்ட வெளிச்சம். இப்போதிருக்கும் சூழல் மனிதன் வாழ தகுதியற்றது ஆனால் கிருமிகள் வாழும் சுழலுக்குள் நாம் நம் பூமியை பராமரித்து வருகிறோம் என்பது வெட்கக்கேடானது. சத்திய வேதாகமம், “நான் பூமியை உண்டு பண்ணி, நானே அதின் மேல் இருக்கிற மனுஷனை சிருஷ்டித்தேன். என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளில் சர்வசேனையும் நான் கட்டளையிட்டேன்”. ஏசாயா : 45 : 12
“வானங்களைச் சிருஷ்டித்து, பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது, நானே கர்த்தர் வேறொருவர் இல்லை”. ஏசாயா : 45 : 18
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் : 2 : 15

இந்த மூன்று வசனங்களும் நமக்கு சில வெளிச்சத்தை அல்லது உண்மையை வெளிப்படுத்துகிறதை காண முடியும். 1. வானத்தையும் பூமியையும் மனுஷனையும் கர்த்தர் படைத்தார் 2. பூமி மனுஷனின் குடியிருப்பாக கொடுக்கப்பட்டது 3. மனுஷன் பூமியை தனக்காக பயன்படுத்திக்கொள்ளவும் அதே நேரத்தில் பாதுகாக்கவும் எனும் மூன்று முக்கியமான உண்மை விளங்குகிறது. மனிதனோ தன் சுய நலத்திற்க்காக பயன் படுத்திக்கொண்டானே ஒழிய அதை பாதுகாக்க தவறி விட்டான் என்ற பேருண்மையை கரோனா வைரஸ் நமக்கு இப்போது உணர்த்திக்கொண்டிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கு இசைவாக வடிவமைக்கப்பட்ட பூமி இன்று கிருமிகளின் சொர்க்க புரியாக காரணம் மனிதனின் சுயநலம்.

உணவில் கலப்படம் :

மனிதனின் சுயநலத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. வாழும் மண்ணை கொடுத்தவன் உண்ணும் உணவையும் கெடுத்து விட்டான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது முது மொழி. ஆசை யாரை விட்டது. ஒரே நாளில் பணக்காரர்களாக வேண்டும் என்ற அதீத ஆசையே விபரீதத்திற்கு காரணம். உற்பத்தியை பெருக்க, குறைந்த நாளில் மகசூலை பெருக்க, அளவை அதிகரிக்க, வீரியத்தை பெருக்க என்று வினோதமான யுக்தியில் உணவு பொருட்கள் அனைத்தும் மனிதனுக்கு விஷத்தை ஏற்றுகிறது. உணவே மருந்தாக இருந்த காலம் போய், மருந்தே உணவாக வாழும் மனிதன் இன்று. விவசாயத்திற்கு அத்தியாவசியமான மழை போயித்து போனது ஒரு காரணம் என்றாலும் போயித்து போன மழைக்கு எது காரணம் என்று தேடியிருக்க வேண்டும். ஆனால் மனிதனோ குறுவை சாகுபடிகளை கண்டு பிடிக்க தன் அறிவை பயன் படுத்தினான். தேவனோ, “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழையை பெய்யப் பண்ணுவேன். பூமி தன் பலனை தரும், வெளியில் உள்ள விருட்சங்கள் எல்லாம் தன் கனியை தரும். லேவியராகமம் : 26 : 4

ஏற்ற காலத்தில் நான் மழையை தருவேன் என்று சொல்லியிருக்கும் போது பருவத்தே ஏன் மழை பொழிவு நடைபெற வில்லை என்றோ பருவம் தவறிய மழை ஏன் என்றோ மனிதன் ஆராயத் தவறிவிட்டான். மாறாக தன் மனம் போல் வாழ்விலும், குறுக்கு வழியிலும் தன் வாழ்வை விருத்தியடைய செய்வதில் தன் மனதை செலுத்த முற்பட்டுவிட்டான். விளைவு அவன் பாதை முள்ளும் குறுக்குமே. சபிக்கப்பட்ட பூமியை பயன்படுத்திக்கொள்ள முனைப்புகாட்டியவனுக்கு நூதன வழி முறைகள் வாழும் ஆதாரமாய் அமைந்து விட்டது. இவைகளால் மனிதனுக்கு கிட்டிய பலன் புசிப்புக்கு நலமான உணவு பதார்த்தம் அல்ல வெளியின் பயிரான கலப்படமும், சத்துக்கள் குன்றியதும், மரபு மாற்றத்திற்உட்பட்டதுமான பதார்த்தங்களே அவனுக்கு உணவானது. விளைவு மண்ணான மனிதன் மண்ணுக்கே திரும்பத்தக்கதாக அவனே அவன் உடலை ஆயத்தப்படுத்திக்கொண்டான்.

நோய் எதிர்ப்பு சக்தி இன்மை :

மேலே சொல்லப்பட்ட இரண்டு காரியங்களினால் மனிதனின் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மை முற்றிலுமாய் குறைந்து போனதற்கான காரணிகளில் ஒன்று. மற்றொன்று மனிதனின் வாழ்க்கை முறை. மூன்றாவது அதிகரிக்கப்பட்ட வீரியத்துடன் கூடிய மருத்துவ முறைகள். இந்த மூன்று காரணிகளும் மனித உடலுக்கான தன்மையிலிருந்து மனிதனை வேறு படுத்தி செயற்கை தன்மைகளுடன் கூடிய இயந்திர தனம் காணப்படும் அளவிற்கு மனிதன் மாறிவிட்டான். மனிதன் என்பவன் beautifully and carefully made எனும் வாக்கியத்திற்கும், அர்த்தத்திற்கும் பாத்திரமாக உருவாக்கப்பட்டவன். ஆனால் கீழ்படியாமையால் துவங்கிய மனித வாழ்க்கைப் பயணம் தொடர் துயரப் பயணம் என்கிற ரீதியிலேயே தொடர்வது துயரத்தின் உச்சம்.

நமது உடல்கூறு தூய்மைக்கு இலக்கணமாகும். நமது உடல் எந்த ஒரு foreign bodyயையும் ஏற்றுக்கொள்ளாது, அனுமதிக்காது. ஆனால் இன்று நிலைமை வேறு. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற காரணங்களினால் பல்வேறு உலோகங்களினால் ஆனா பொருட்கள், எந்திரங்கள் மற்றும் மின்சாதன கருவிகள் பொருத்தப்படும் அளவுக்கு உடல் பக்குவப் பட்டுள்ளது. மனித உடலின் ஒவ்வாமை என்பது இன்று ஏட்டளவில் நின்று போன கதை. ஆகவே தான் தடுப்புசிகள் / மருந்துகள் யாவும் நோய் தடுப்பாக அல்ல நோய் தாங்குபவையாக வருகிறது. நாம் அனைவரும் அறிந்தும் அறியாமலும் இயந்திரமயமாகி வருகிறோம். இதன் முடிவு அழிவு.

வேதாகமம் தரும் தீர்வு :

நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுகிளிகளுக்கு கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்துக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன். 2 நாளாகமம்: 7 : 13 – 14 . நாம் இவ்வார்த்தைக்கு இணங்குவோமானால் நாம் அனைவரும் பிழைப்பது உறுதி. நாம் செய்ய வேண்டுவது இது தான் 1. நாம் நம் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி 2. நம் தேவன் முகத்தைத் தேடி, ஜெபித்து 3. நாம் நம்மை தாழ்த்தினால் நமக்கு பதில் இப்படியாக வரும். 1. நம் வேண்டுதலை பரலோகத்தில் இருக்கும் தேவன் கேட்ப்பார் 2. நாம் உணர்த்து தாழ்த்தினதை பார்த்து, மன்னிப்பார் 3. அப்பொழுது நம் தேசத்திற்கு சுகம் கிடைக்கும். நாம் மகிழ்ச்சி அடைவது நிச்சயம், ஆமென்.

சுவி. பாபு T தாமஸ் , இராணிப்பேட்டை.
ourshepherdsvoice.wixsite.com/mysite
ourshepherdsvoice@gmail.com

Bible Study வேத ஆராய்ச்சி counseling Vertical Thoughts - மேலான எண்ணங்கள்
  1. முழு இருதயத் தோடும் ஆண்டவரை நேசிக்க அர்ப்பணிக்கிறேன். –  மத்தேயு 22:37
  2. எல்லா தாழ்மையோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அர்ப்பணிக்கிறேன். – பிலிப்பியர் 2:6, அப்போஸ்தலர் 20:19
  3. என் முழு சிந்தையோடும் கற்றுக்கொள்ள அர்ப்பணிக்கிறேன். – மத்தேயு 11:29
  4. முழு பெலத்தோடும் சொல்லிக்கொடுக்கவும், பிரசங்கிக்கவும் அர்ப்பணிக்கிறேன்.- 2 தீமோத்தேயு 4:2
  5. எப்போதும் உண்மையே பேச அர்ப்பணிக்கிறேன். – மத்தேயு 5:37, எபேசியர் 6:14
  6. வாழ்நாள் முழுவதும் எல்லோரையும் நேசிக்கவும், மரியாதை செலுத்தவும் அர்ப்பணிக்கிறேன். – பிலிப்பியர் 2:3, 1 பேதுரு 2:17
  7. வெற்றி பெறுபவர்களை பாராட்டவும், பாதிக்கப்பட்டவர்களை தூக்கி விடவும் அர்ப்பணிக்கிறேன். – 1 தெச. 5:14
  8. மனிதர்களை அல்ல, பிரச்சனைகளை விவாதிக்க அர்ப்பணிக்கிறேன். –  1 சாமுவேல் 16:7
  9. வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அர்ப்பணிக்கிறேன். –  1 கொரிந்தியர்15:57
  10. கிறிஸ்துவுக்காக பாடுகளை ஏற்றுக்கொள்ள அர்ப்பணிக்கிறேன்  – மத்தேயு 10:38
counseling Vertical Thoughts - மேலான எண்ணங்கள் சமூக வலைதளங்களிலிருந்து

ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு…
உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு…
உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு… இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி….
அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது…
தன் பலம் முழுவதையும் சேர்த்து…..

என்ன ஆச்சு…
முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது…
என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு….

இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து….
தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு….. நம்மையே இழந்து விடுகிறோம்….

நா_காக்க….

படித்ததில்_பிடித்தது….

– Author unknown

Received in whatsapp social media.

Bible Study வேத ஆராய்ச்சி counseling spiritual news, ஆவிக்குரிய தகவல்கள் Vertical Thoughts - மேலான எண்ணங்கள்

வானவில்லை நோக்கும்போது நமது உள்ளங்களில் குதுகலம்தான். வானவில்லை நமதாண்டவர் அதை ஒரு அடையாளமாக நிறுத்தினார் (ஆதியாகமம் 9:13). இனிமேல் தண்ணீரினால் மனித குலத்தை அழிக்காமல் இருக்க வானவில்லை உடன்படிக்கை அடையாளமாக வைத்தார். அது மனித குலத்திற்கான நம்பிக்கை அடையாளம்.

Rainbow, வானவில்

நாமும்கூட மற்றவர்களுக்கு நம்பிக்கை அடையாளமாக இருக்கலாமே! நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவின் ஒளி நம் மூலமாக இந்த உலகத்திற்கு பரவ வேண்டும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:16). அதனால் நாமும் மற்றவர்களுக்கு நம்பிக்கை அடையாளமாக இருக்கலாம். வானவில்லைப் போன்று நாமும் அழிவிற்கு நேராய் பயணிப்போருக்கு கிறிஸ்துவை நம்பிக்கை அடையாளமாக காட்டும் சின்னமாக இருப்போமாக.

கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும் சிற்பிகளில் ஒருவன்,
சுவிசேஷகர் யோவான் காந்தி இரா
Anchor Ministries

Bible Study வேத ஆராய்ச்சி counseling spiritual news, ஆவிக்குரிய தகவல்கள் Vertical Thoughts - மேலான எண்ணங்கள் சமூக வலைதளங்களிலிருந்து

*நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தாய், தகப்பனின் கரிசனை, அக்கறை, முயற்சி.

ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்புகளில் பின்வரும் துண்டுப் பிரதிகளை வெளியிட்டனர்.*

காயீனை உருவாக்குவது எப்படி?

1. பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு.
2. கெட்ட வார்த்தைகைப் பேசும்போதுச் சிரித்து மகிழ்.
3. ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும்.
4. தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே.
5. அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய்.
6. அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!)
7. பிள்ளைகளுக்குமுன் கணவனுடன் சண்டை போடு.
8. பணம் கேட்கும்போதெல்லாம் கொடு.
9. அவனுக்கு எதையும் மறுக்காதே.
10.மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு.
11.அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு.
12.கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.

ஆபேலை உருவாக்குவது எப்படி?

1. கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு-நீதிமொழிகள் 22:6.
2. தேவையானபோது தண்டனை கொடு-நீதிமொழிகள் 22:15.
3. முன்மாதிரியாக வாழ்ந்துக்காட்டு-2 தீமோத்தேயு 1:5.
4. நாள்தோறும் பைபிள் வாசிக்கக் கற்றுக்கொடு-சங்கீதம் 119:9.
5. ஜெபிக்கக் கற்றுக்கொடு-மத்தேயு 18:20.
6. தன் கைகளால் வேலை செய்யக் கற்றுக்கொடு-புலம்பல் 3:27.
7. ஆவிக்குரியவைகளுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்-1 தீமோத்தேயு 4:8.
8. பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடு- 1 பேதுரு 5:5.
9. தாய்மையின் மேன்மையை உணர்த்து-1 தீமோத்தேயு 5:25.
10.சபை வழிபாட்டுக்கும், ஆவிக்குரிய கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வதில் முன்மாதிரியாக இரு-எபிரெயர் 10:25.
11.நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடு-ரோமர் 13:1.
12.நன்னடத்தை நற்பயனைத் தரும் என்பதை விளக்கிச் சொல்-ரோமர் 12:17.

நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தாய், தகப்பனின் கரிசனை, அக்கறை, முயற்சி, ஜெபம். ஆமென்.

– Author unknown

Received in whatsapp social media.