சங்கத்தமிழும் சந்திக்கும் வங்ககடலோரம்சீறிப்பாயும் அலைகள் தாலாட்டசிங்காரமாயமைந்த சென்னை நகரியேகொக்கரித்த கொரோனாவை கண்டுஅகிலமே அடங்கிய வேளைஆடாத ஆட்டமெலாம் ஆடினாய்இடைவெளியை மறந்துஇளக்காரமாய் சிரித்துஇரண்டாமிடத்தை பிடித்தாய்இன்னும் அடங்கவில்லையெனஇன்னுமோரிரண்டுவாரம் ஒட்டுமொத்தமாய் ஒடுங்கப்போகிறாய்-உன்ஓங்காரம் ஒழியாதோ கொடும்கொரோனா கோரத் தாண்டவம்குறையாதோபட்டபின்னும் தெளியாதெனில்பட்டுப்போகும் வாழ்வுபார் போற்றும் நகரம்பாழாகும் முன்னேபக்குவமாய் அடங்குபத்திரமாய் வாழு-உடல்மூன்று வேளை கழுவாவிடில்மூச்சு முட்டி சாவாய்மிளகு பூண்டு இஞ்சியெனஉணவு உண்டு பிழைப்பாய்கபசுர குடிநீர் கபமகற்றிகடுங்காய்ச்சலதை நீக்கும்கட்டுப்பாடு காத்தால்கலகலப்பாய் வாழ்வாய்-இனிகாலமெல்லாம் மகிழ-இக்கொரோனா ஒழியட்டும் எனபிரார்த்தனை செய்யும் உன்நலம் விரும்பும் – […]

நியாயமில்லாமல் மற்றவர்கள் தூஷிக்கும் போது … சந்தோஷமான சூழ்நிலை, நெருக்கடியான சூழ்நிலை, வெற்றி பெற்ற சூழ்நிலை, மனக்கசப்பான சூழ்நிலை என்று வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் நாம் செல்ல வேண்டிருக்கிறது.  சந்தோஷமான, வெற்றிகரமான சூழ்நிலையில் கர்த்தரை சில நேரங்களில் மறந்தாலும், மனதிற்குள்ளாக அவரைப் போற்றுகின்றோம்.  ஆனால், கசப்பான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் செல்லும்போது மற்றவர்கள் நம்மைப் பார்த்து தகாத வார்த்தைகளால் சபித்து (அந்த சாபத்தைப் பெற எந்தவித அநியாயமும் செய்யவில்லை என்பது […]

ஒவ்வொரு விஷயத்திற்கும் நமக்கென்று ஒரு கருத்துக்கள் இருக்கும். அப்படியாக சில விஷயங்களை போகிற போக்கில் சொல்லுகிறேன். பொதுவான விஷயங்களைப் பற்றித்தான்… நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறோம். பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியிருப்பார். பறவைகள் மட்டும்தானா பலவிதம்; மனிதர்களும்தான். ஒரு நண்பரிடம் உங்களைப் அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்றுக் கேட்டப்போது… அவர் சிரித்துக் கொண்டே ‘‘இங்க பலமான ஆவிக்குரிய சத்தியங்கள் கிடைக்காது; அதனால் அதற்காக […]

சோம்பலாக – வேண்டுமென்றே அதிக நேரம் தூங்குபவர்கள் அடையும் பலன் என்ன என்று வேதாகமம் நீதிமொழிகள் 6:9-11ல் கூறுகிறது. முதலாவது, தரித்திரமும் குறைவுகளும் வரும் என்று நமது வேதாகமம் எச்சரிக்கிறது. அநேகருடைய வாழ்க்கையில் ஏழ்மையும் குறைவுகளும் இருப்பதற்கு முக்கிய காரணம் சோம்பலாகும். வாழ்க்கையில் வறுமையும் குறைவுகளும் போக வேண்டுமானால் நாம் சோம்பலையும் நெடுந் தூக்கத்தையும் விட்டுவிட வேண்டும். கிறிஸ்துவில் ஐக்கியமானவர்களே! நம்மைச் சீர்தூக்கிப் பார்ப்போம். நம்முடைய வாழ்க்கையில் ஜெபத்திற்குப் பதிலாக […]

இந்திய தேசத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இந்திய அரசாங்கத்தின்படி 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். சுதந்திரமடைந்து இன்றும் இந்த சதவீதம் மாறாமல் உள்ளது. காரணம் என்ன? சுவிசேஷகர்கள் அநேகர் வந்தும் சென்று வருகிறார்கள். சுவிசேஷம் இந்தியா முழுவதும் பரவ அநேக முயற்சிகளும் பல சுவிசேஷ இயக்கங்களும் பாடுபடுகின்றன. அதற்கு பலனில்லாமில்லை. இந்திய கிராமங்களிலும், பழங்குடியினரும், ஆதிவாசிகளும் கிறிஸ்துவுக்குள் வந்து கொண்டு இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியான செய்திதான். ஆனாலும், இன்னும் கிறிஸ்துவுக்குள் அநேகர் […]