counseling health

கரோனா வைரஸ் எனப்படும் COVID19, மனிதனை உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொடிய வியாதிகளில் ஒன்று வேகமாக பரவி, மரண பயத்தில் மனிதனை வைத்திருக்கிறது. இது ஒரு கொடிய தோற்று வியாதியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்றைக்கு உலகில் அநேகமாக எல்லா நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை இந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கிறது, அதே சமயம் இந்த தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகிறது. பல வளர்ந்த மற்றும் முன்னணி நாடுகள் இந்த வைரஸ் தொற்றினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பாக சைனா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, இரான், அமெரிக்கா, ஸ்பெயின், எகிப்து, ஜெர்மனி என்று பட்டியல் நீள்கிறது ஒரு பெரும் அச்சத்திற்கு காரணம். இந்த வரிசையில் இந்தியாவும், 147 நோய் தொற்றியோர் எண்ணிக்கையுடன் ,அடங்கும்.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க அரசாங்கங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அவ்வகையில் மக்களை சுகாதார துறை அறிவுறுத்தும் வைரஸ் தடுப்பு குறிப்புக்களில் முக்கியமானவை கை கழுவுதல், முகக் கவசம், கையுறை அணிதல் ஆகும். இதன் மூலம் வைரஸ் மனிதர்களிடையே பரவுவதை இயல்பாகத் தடுத்து விட முடியும் என்று அரசு நம்புகிறது. இதோடு நில்லாமல் பொது வெளியில் ஆறு அடி இடைவெளி அவசியம் என்றும் கண், மூக்கு, வாய் பகுதிகளை தங்கள் கைகளால் தொடுவதை தவிர்ப்பது போன்ற விதி முறைகள் மிஞ்சுவதையும் கேட்க முடிகிறது. அப்படியானால் இந்த தடுப்பு முறைகள் நமக்கு உணர்த்துவது தான் என்ன? பொதுவாக வைரஸ் ஆயுள் காலம் மிக குறைவாக இருக்கும். வெளிப்புற சீதோஷ்ண நிலையில் அவைகள் உயிர் வாழ்வது கடினம் போன்ற நிலைகள் மாறி, இன்று நாள், வாரக்கணக்கில் கரோனா வைரஸ் வாழக்கூடிய நிலை வந்திருக்கிறது என்றால், நாம் சுவாசிக்கும் காற்றின் மாசு எவ்வகை எத்தகையது என்பது புரியும். நம் கால் நம் கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்களை தொடுவதே ஆபத்து எனும் அவல நிலை எத்துனை அபாயகரமானது.

இன்றைக்கு இந்த கரோனா வைரஸ்சின் தீவிரம் பயங்கரமாய் இருப்பதற்கு காரணம் 1. காற்று மாசு 2. உணவில் கலப்படம் 3. மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இன்மை. ஆக இந்த மூன்றே முக்கிய மூலக்காரணம். இந்த மூன்று காரணிகளுக்கான காரணத்தை களைவதற்கான முனைப்பில் நமோ, நமது அரசோ இன்று இல்லை. நாம் அனைவரும் எப்போதும் காரியத்தில் மாத்திரம் கண்ணாய் இருப்போம். இது தான் நமது தொன்று தொட்ட வழக்கம். இதில் நமக்கு நிரந்தர தீர்வுக்கு வழியில்லை. நேற்று ஒன்று இருந்தது, இன்று ஒன்று இருக்கிறது, நாளை ஒன்று வரும். நமக்கோ நேற்றைய குறித்த வருத்தம் இல்லை, நாளைய குறித்த கவலையும் இல்லை. நாம் அனைவரும் இன்றைக்காக மட்டுமே வாழ்கிறோம். நம் அனைவருக்கும் தேவையான ஒரு குணம் நேற்றைய குறித்த வருத்தம், அதினால் நாம் பாடம் கற்கிறோம். அதேபோல நாளைய குறித்த கவலை நமக்கு அச்சத்தையும் நம்பிக்கையையும் தருகிறது அதினால் இன்றைய வாழ்க்கையை நாம் சீர்படுத்தி சிறப்பாய் வாழ முயற்சிப்போம். அதுவே சிறப்பான வாழ்க்கையாக முடியும்.

காற்று மாசு :

இந்த கரோனா வைரஸ்சின் முக்கிய அவையவம் பாதிப்பு நுரையிரல். ஆனால் அதே நேரத்தில் வைரஸ்சின் ஆயுட் காலம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நம் சுற்றுச் சூழலின் அவல நிலை எப்படி என்பது வெட்ட வெளிச்சம். இப்போதிருக்கும் சூழல் மனிதன் வாழ தகுதியற்றது ஆனால் கிருமிகள் வாழும் சுழலுக்குள் நாம் நம் பூமியை பராமரித்து வருகிறோம் என்பது வெட்கக்கேடானது. சத்திய வேதாகமம், “நான் பூமியை உண்டு பண்ணி, நானே அதின் மேல் இருக்கிற மனுஷனை சிருஷ்டித்தேன். என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளில் சர்வசேனையும் நான் கட்டளையிட்டேன்”. ஏசாயா : 45 : 12
“வானங்களைச் சிருஷ்டித்து, பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது, நானே கர்த்தர் வேறொருவர் இல்லை”. ஏசாயா : 45 : 18
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் : 2 : 15

இந்த மூன்று வசனங்களும் நமக்கு சில வெளிச்சத்தை அல்லது உண்மையை வெளிப்படுத்துகிறதை காண முடியும். 1. வானத்தையும் பூமியையும் மனுஷனையும் கர்த்தர் படைத்தார் 2. பூமி மனுஷனின் குடியிருப்பாக கொடுக்கப்பட்டது 3. மனுஷன் பூமியை தனக்காக பயன்படுத்திக்கொள்ளவும் அதே நேரத்தில் பாதுகாக்கவும் எனும் மூன்று முக்கியமான உண்மை விளங்குகிறது. மனிதனோ தன் சுய நலத்திற்க்காக பயன் படுத்திக்கொண்டானே ஒழிய அதை பாதுகாக்க தவறி விட்டான் என்ற பேருண்மையை கரோனா வைரஸ் நமக்கு இப்போது உணர்த்திக்கொண்டிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கு இசைவாக வடிவமைக்கப்பட்ட பூமி இன்று கிருமிகளின் சொர்க்க புரியாக காரணம் மனிதனின் சுயநலம்.

உணவில் கலப்படம் :

மனிதனின் சுயநலத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. வாழும் மண்ணை கொடுத்தவன் உண்ணும் உணவையும் கெடுத்து விட்டான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது முது மொழி. ஆசை யாரை விட்டது. ஒரே நாளில் பணக்காரர்களாக வேண்டும் என்ற அதீத ஆசையே விபரீதத்திற்கு காரணம். உற்பத்தியை பெருக்க, குறைந்த நாளில் மகசூலை பெருக்க, அளவை அதிகரிக்க, வீரியத்தை பெருக்க என்று வினோதமான யுக்தியில் உணவு பொருட்கள் அனைத்தும் மனிதனுக்கு விஷத்தை ஏற்றுகிறது. உணவே மருந்தாக இருந்த காலம் போய், மருந்தே உணவாக வாழும் மனிதன் இன்று. விவசாயத்திற்கு அத்தியாவசியமான மழை போயித்து போனது ஒரு காரணம் என்றாலும் போயித்து போன மழைக்கு எது காரணம் என்று தேடியிருக்க வேண்டும். ஆனால் மனிதனோ குறுவை சாகுபடிகளை கண்டு பிடிக்க தன் அறிவை பயன் படுத்தினான். தேவனோ, “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழையை பெய்யப் பண்ணுவேன். பூமி தன் பலனை தரும், வெளியில் உள்ள விருட்சங்கள் எல்லாம் தன் கனியை தரும். லேவியராகமம் : 26 : 4

ஏற்ற காலத்தில் நான் மழையை தருவேன் என்று சொல்லியிருக்கும் போது பருவத்தே ஏன் மழை பொழிவு நடைபெற வில்லை என்றோ பருவம் தவறிய மழை ஏன் என்றோ மனிதன் ஆராயத் தவறிவிட்டான். மாறாக தன் மனம் போல் வாழ்விலும், குறுக்கு வழியிலும் தன் வாழ்வை விருத்தியடைய செய்வதில் தன் மனதை செலுத்த முற்பட்டுவிட்டான். விளைவு அவன் பாதை முள்ளும் குறுக்குமே. சபிக்கப்பட்ட பூமியை பயன்படுத்திக்கொள்ள முனைப்புகாட்டியவனுக்கு நூதன வழி முறைகள் வாழும் ஆதாரமாய் அமைந்து விட்டது. இவைகளால் மனிதனுக்கு கிட்டிய பலன் புசிப்புக்கு நலமான உணவு பதார்த்தம் அல்ல வெளியின் பயிரான கலப்படமும், சத்துக்கள் குன்றியதும், மரபு மாற்றத்திற்உட்பட்டதுமான பதார்த்தங்களே அவனுக்கு உணவானது. விளைவு மண்ணான மனிதன் மண்ணுக்கே திரும்பத்தக்கதாக அவனே அவன் உடலை ஆயத்தப்படுத்திக்கொண்டான்.

நோய் எதிர்ப்பு சக்தி இன்மை :

மேலே சொல்லப்பட்ட இரண்டு காரியங்களினால் மனிதனின் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மை முற்றிலுமாய் குறைந்து போனதற்கான காரணிகளில் ஒன்று. மற்றொன்று மனிதனின் வாழ்க்கை முறை. மூன்றாவது அதிகரிக்கப்பட்ட வீரியத்துடன் கூடிய மருத்துவ முறைகள். இந்த மூன்று காரணிகளும் மனித உடலுக்கான தன்மையிலிருந்து மனிதனை வேறு படுத்தி செயற்கை தன்மைகளுடன் கூடிய இயந்திர தனம் காணப்படும் அளவிற்கு மனிதன் மாறிவிட்டான். மனிதன் என்பவன் beautifully and carefully made எனும் வாக்கியத்திற்கும், அர்த்தத்திற்கும் பாத்திரமாக உருவாக்கப்பட்டவன். ஆனால் கீழ்படியாமையால் துவங்கிய மனித வாழ்க்கைப் பயணம் தொடர் துயரப் பயணம் என்கிற ரீதியிலேயே தொடர்வது துயரத்தின் உச்சம்.

நமது உடல்கூறு தூய்மைக்கு இலக்கணமாகும். நமது உடல் எந்த ஒரு foreign bodyயையும் ஏற்றுக்கொள்ளாது, அனுமதிக்காது. ஆனால் இன்று நிலைமை வேறு. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற காரணங்களினால் பல்வேறு உலோகங்களினால் ஆனா பொருட்கள், எந்திரங்கள் மற்றும் மின்சாதன கருவிகள் பொருத்தப்படும் அளவுக்கு உடல் பக்குவப் பட்டுள்ளது. மனித உடலின் ஒவ்வாமை என்பது இன்று ஏட்டளவில் நின்று போன கதை. ஆகவே தான் தடுப்புசிகள் / மருந்துகள் யாவும் நோய் தடுப்பாக அல்ல நோய் தாங்குபவையாக வருகிறது. நாம் அனைவரும் அறிந்தும் அறியாமலும் இயந்திரமயமாகி வருகிறோம். இதன் முடிவு அழிவு.

வேதாகமம் தரும் தீர்வு :

நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுகிளிகளுக்கு கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்துக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன். 2 நாளாகமம்: 7 : 13 – 14 . நாம் இவ்வார்த்தைக்கு இணங்குவோமானால் நாம் அனைவரும் பிழைப்பது உறுதி. நாம் செய்ய வேண்டுவது இது தான் 1. நாம் நம் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி 2. நம் தேவன் முகத்தைத் தேடி, ஜெபித்து 3. நாம் நம்மை தாழ்த்தினால் நமக்கு பதில் இப்படியாக வரும். 1. நம் வேண்டுதலை பரலோகத்தில் இருக்கும் தேவன் கேட்ப்பார் 2. நாம் உணர்த்து தாழ்த்தினதை பார்த்து, மன்னிப்பார் 3. அப்பொழுது நம் தேசத்திற்கு சுகம் கிடைக்கும். நாம் மகிழ்ச்சி அடைவது நிச்சயம், ஆமென்.

சுவி. பாபு T தாமஸ் , இராணிப்பேட்டை.
ourshepherdsvoice.wixsite.com/mysite
ourshepherdsvoice@gmail.com

Bible Study வேத ஆராய்ச்சி Blog

– சுவி. பாபு T தாமஸ்


தண்ணீர் கண்ணீர் வரும் சொல்லாய் மாறி வருகிறது. ஆபத்து வெகு தொலைவில் இல்லை என்பதை கட்டியம் கூறும் நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை. பருவ மழை பொய்த்து வருகிறது. சூரிய கதிர்களின் வெப்பம் நாளுக்கு நாள் உச்சத்தை தொடுவது வாடிக்கையாகிவிட்டது. ஒவ்வொரு பருவத்திற்க்கென்று இருந்த நிலைப்பாடுகளும், கால வரையறையும், கோட்பாடுகளும் மாறி வெகு காலம் கடந்து விட்டது. வறண்டே பார்த்த ஆறுகள் , குளம்கள் , குட்டை கள் எனும் இத்தியாதி நீர்நிலைகாளாய் ஒருகாலத்தில் பெயரளவில் இருந்த யாவும் இன்று உருவம் மாறி வடிவம் இழந்து, அடையாளத்தையே தொலைத்த சோகத்தை யாரும் நினைப்பதுக் கூட இல்லை.

உயிர் நாடியாம் தண்ணீர் :

இத்தனைக்கும் மேலாக நாம் மேலே சொன்ன கண்ணீர் தரும் தண்ணீர் மட்டும் மனுக்குலத்திற்கு மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது. மனிதனுக்கு மட்டுமா என்றால் இல்லை மனிதன் வாழும் பூமிக்கும் ஆதாரமாக இருப்பது தண்ணீரே. நம் மனித உடலில் தண்ணீரின் பங்கு 60% என்றால் நம்ப முடிகிறதா? மாத்திரம் அல்ல சில உடல் உறுப்புக்களில் நீரின் அளவு 90% என்றும் அளவிடப்படுகிறது. இன்னும் குறிப்பாக இருதயம் மற்றும் மூளை ஆகியவைகளின் நீரின் அளவு 73% என்றும் நுரையிரலில் 83% மாகவும் அளவிடப்படுகிறது. சரி, மனித உடலில் நீரின் பங்களிப்பு இவ்வளவு என்றால் நாம் வாழும் பூமியில் நீரின் ஆளுமை 71% அதாவது பூமியின் மொத்தப்பரப்பளவில் 71% தண்ணீரால் சூழப்பட்டிருப்பதை குறிக்கிறது.

நாம் உண்ணும் உணவு பொட்ருட்களில் காய் கனி வகைகளில் நீரின் அளவு அதிகம். சில அறிய வகை தாவரங்களில் தண்ணீர் பொக்கிஷ வைப்பாக ஜீவ ராசிகள் அனைத்துக்குமான வரப்பிரசாதமாக வைக்கபட்டிருக்கிறது. மட்டுமல்லாமல் காற்றில் நீர் இருக்கிறது, பூமியின் தூளில் நீர் கலந்தே இருப்பதை நாம் அறிவோம். இதோடு நில்லாமல் பூமிக்கு ஆதாரமான தண்ணீரை பனிப்பாறைகளாக சேமித்து வைத்திருக்கிறது இயற்க்கை. இது இயற்கையின் நியதி மாத்திரமல்ல நம் ஒவ்வொருவருக்கும் தண்ணீரின் அத்தியாவசியத்தை உணர்த்திக்கொண்டிருப்பதாகவே அமைகிறது.

அப்படியானால், தண்ணீரின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் மேற்சொன்ன காரணிகள் மூலம் நன்கு அறிய முடிகிறது. இத்துணை அத்தியாவசியமான தண்ணீருக்கு இப்போது பஞ்சம் வந்திருக்கிறது என்றால் இயற்க்கை விதித்த வழியில் கோளாறு என்பதே சரியான பதிலாகும். இந்த கோளாறை சரி செய்வதில் தான் நம் வாழ்வே அடங்கி இருக்கிறது. இயற்க்கை விதியினை சரியாகப்புரிந்தால் மாத்திரமே நாம் செய்த, செய்கின்ற தவறை கண்டு பிடிக்கமுடியும், அதை களைய முடியும்.

விதி எண் 1 : ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழிங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ஆதியாகமம் : 1 : 1 – 2
பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுப்பண்ணி, ஆகாய விரிவுக்கு கிழே இருக்கிற ஜலத்திற்கும், ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார், அது அப்படியே ஆயிற்று.

ஆதியாகமம் : 1 : 6 – 7 – பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும்கடவது என்றார், அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் : 1 : 9 – 10
விதி எண் 2 : அவர் நீர்த் துளிகளை அணுவைப் போல ஏறப்பண்ணுகிறார். அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது. யோபு : 36 : 27

அவர் நீர்த் துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார். அவர் அவைகளுக்கு கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப் பண்ணுகிறார். ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரப்பண்ணுகிறார். யோபு : 37 : 11 – 12

மழைக் கோட்பாடுகள் :

இந்த இரண்டு விதிகளிலும் மழைக்கான ஆழ்ந்த அநேக சூட்சுமங்கள் அடங்கியிருப்பதை காணமுடியும். இவ்விரு விதிகளும் நமக்குணர்த்தும் மூன்று மிக முக்கியமான தார்ப்பரியங்களைப் பார்போம். 1. நீர் ஒன்றே, இரண்டாக ( + – ) மேலேயும் கீழு மாக இருப்பது 2. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது, சுழற்சிக்கு உட்ட்பட்டது 3. கட்டளைக்கு உட்பட்டே செயலாற்றக்கூடியது.
மேற்சொன்ன காரணக் காரியங்களை நாம் கவனத்தில்கொண்டு செயல்படும்போது போதுமான மழை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதில் நமக்கு ஐயப்பாடுகள் தேவையில்லை. தண்ணீருக்கான இரண்டு விதிகளைப் பார்த்தோம். அவைகளிலிருந்து மூன்று முக்கியமான கோட்பாடுகள் யாவை என்றும் அறிந்துக்கொண்டோம். இப்போது அந்த முன்றாவது கோட்பாட்டை சற்று ஆழமாக பார்ப்போம்.

கோட்பாடு எண் 3 :

மழை பூமியில் பொழிய வேண்டுமானால் உரியவரின் கட்டளை அவசியம் என்பதை மூன்றாவது கோட்பாடு நமக்கு உணர்த்துகிறது. இதில் நமக்கு எள்ளளவும் ஐயம் வேண்டுவதில்லை காரணம் வீட்டுப் பிராணிகளை நாம் அறிவோம், அவைகள் அவைகளின் உரியவருக்கே கட்டுப்படுகிறது. அப்படியானால் மழையும் அவ்வாறே கட்டுப்படும் இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் ஒன்றை மாத்திரம் தெரிந்துக்கொள்ளவேண்டும் அல்லது உணர்ந்துக்கொள்ளவேண்டும் அவைகள் யாருடைய கட்டளைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இது தான் மிக முக்கியம். அவர் யார்?

சிருஷ்டி கர்த்தர் :

வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஏசாயா : 45 : 18

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ செயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் : 1 : 27

வானத்தைப் படைத்தவர் தான் பூமியையும் உண்டாக்கினார். அந்த பூமியை வெறுமையாய் இருக்க படைக்காமல் குடியிருப்புக்காகவே படைத்தவரும் அவரே. அந்த பூமியில் குடியிருக்கிற நம்மையும் படைத்தவர் தான் மழைக்கு கட்டளை கொடுக்கிறார் என்பதும் நமக்கு தெளிவாக விளங்குகிறது. இங்கே மழைக்கு கட்டளை கொடுப்பவர் யார் என்பது தெரிந்து விட்டதால், மழை வரவில்லை என்றால் யாரை அணுகவேண்டும் என்பதும் நமக்கு தெளிவாகிவிட்டது.

சார்பு விதி :

இங்கே நமக்கு ஒரு கேள்வி வரும் அல்லது வரவேண்டும். ஒரு படைப்பு என்றால் அதின் வெற்றியே அது சரியாய் இயங்கும் தன்மையை பொருத்து தான் அமையும். படைக்கப்பட்ட அனைத்தும் தான் செய்யத்தக்கதை அதின்னதின் காலத்தில் செயல்பட்டால் தானே அழகு. உண்மை, படைக்கப்புக்கள் யாவும் தம் பணியை செவ்வனே செய்துக்கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமானால் மனித படைப்பைத் தவிர அனைத்தும் தம் பாதையில் விலகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதேநேரத்தில் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது, அனைத்து படைப்புக்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் தன்மை கொண்டவைகளாகும். அப்படியானால் ஒன்றில் நிகழும் மாற்றம் அனைத்திலும் பிரதிபலிக்கும் என்பதே படைப்பின் தனித்துவம்.

உலக வெப்பமயமாதல் :

உலக வெப்பமயமாதல் இன்றைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது நாம் அறிந்ததே. இந்த அச்சுறுத்தலுக்கு காரணம் மனுக்குலத்தின் அத்துமிறல் என்பதே உண்மை. அனைத்து படைப்புக்களிலும் சுய சிந்தை ஆற்றல் பெற்ற விசேஷப் படைப்பு மனிதப்படைப்பு மட்டுமே. அதி சிறப்பான சுய சிந்தை ஆற்றலை மனிதன் தவறாக பயன்படுத்துவதால், தன் அழிவை தானே நிர்ணயித்துக் கொள்ளும் துரதிர்ஷ்டத்தை உடையவனாகவும் மனித படைப்பு திகழுகிறது. தனக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை மனிதன் தவறாக பயன்படுத்துவான் என்று அறிந்திருந்தார் தேவன். ஆகவே சத்திய வார்த்தையாகிய வேதாகமத்தை அவனுக்கு கொடுத்து, அதிலுள்ள கட்டளைகளையும், கற்பனைகளையும், நீதி நேயமங்களையும் கைக்கொண்டு வழி தவறாத, தடம் புரளாத நெறியில் வாழ வழி செய்தார்.

மனிதனோ அக் கட்டளைக்கு செவி மடுக்காமல் செயல்பட்டதின் விளைவே உபத்திரவம், பாடுகள், கஷ்டங்கள். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் : 2 : 15 பூமியை பண்படுத்தவும் காக்கவும் செய்யும் பொறுப்பில் இருக்கும் மனிதனுக்கு உதவியாக தான் தேவன் சூரியனை, சந்திரனை, மழையை, மிருக ஜீவன்களை எல்லாம் தந்தார். மனிதன் விதிகளை மீறினான், இயற்கைக்கு எதிராக செயல்பட்டான். எல்லாம் தலைகிழானது. ஆபத்தை வருவித்துக்கொண்டான்.

சரி, இப்போது மழைக்கு வருவோம். “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய் யப்பண்ணுவேன், பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்”. லேவியராகமம் : 26 : 4 இது மழைக்கான விதியின் அடிப்படையிலான செயல் பாட்டு முறைமை. மழை ஏற்ற காலத்தில் பொழிய வேண்டும். அப்போது பூமியில் வாழும் ஜீவ ராசிகள் அதின் பாலா பலனால் அவைகளுக்கு ஜீவனம் உண்டாகும். இந்த சுழற்சி சீராக நடைபெற வேண்டுமானால் சில அடிப்படை செயல்கள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கவேண்டும், ஏன் ? அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்புத் தன்மை இலக்கணமே காரணம். அந்த அடிப்படையில் மனிதன் செய்திருக்க வேண்டியது அல்லது செய்ய வேண்டியதை இப்போது பார்க்கலாம்.

  1. நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக ; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  2. என் ஓய்வு நாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபத்தியாயிருப்பீர்களாக ; நான் கர்த்தர்.
  3. நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,
  4. நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன், பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். லேவியராகமம் : 26 : 1 – 4

ஆக எப்போது மேற்சொன்னவை மீறப்பட்டதோ, அப்போதிருந்தே அனைத்தும் மாற ஆரம்பித்துவிட்டது. கால நிலையில் மாற்றம், அளவீடுகளில் மாற்றம் மாத்திரமல்ல இதன் அடிப்படையில் அழிவுகளும், பேரழிவுகளும், வறட்சியும் பூமி சந்திக்க வேண்டியதாயிற்று.

நூதன மாற்று வழிகள் :

இந்த நிலை, இன்று நேற்று வந்ததல்ல மாறாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிகழ்த்த மாற்றத்தின் விளைவு. ஆனால் இன்று வரை இதற்கு தீர்வு காண நாம் முயற்சிக்கவில்லை என்பது தான் மிக வருத்தமான காரியம். மாறாக மனிதன் நூதனமான மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்தான். அவைகளில் ஒன்று, செயற்கை மழைக்கான யுக்திகளை கையில் எடுத்தான், அது மேலும் பிற சிக்கலுக்கு வழி வகுத்ததே ஒழிய தீர்வை தரவில்லை.
இதுவுமல்லாமல், அறுப்புக் காலம் வர இன்னும் மூன்று மாதம் இருக்கும் போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன். ஒரு வயலின்மேல் மழை பெய்ந்தது, மழை பெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று. இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை. ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற் போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் : 4 : 7 – 8 இப்படி தொடர்ந்து நாம் எச்சரிக்கப்பட்டும், உணர்வடையவில்லை.

இப்போதும் மனம் திரும்பாமல் போனால் எப்படி ? இன்றைய சூழலில் அநேகமாயிரம் பிரயத்தனங்களை நாம் எடுத்துக் கொண்டுத் தான் வருகிறோம். ஆனால் அனைத்தும் சரியானது தானா ? என்று சீர்தூக்கிப் பார்ப்பதில் தொடர்ந்து தவறுகிறோம். அநேக இடங்களில் தொடர்ந்து மந்திரங்களும், பிரர்தனைகளும், ஜெபங்களும் நடந்த வண்ணம் இருக்கிறது.

உதாரணத்திற்கு :

வீட்டுக் காரியமோ அல்லது வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கோ சமையலுக்கா அடுப்பை பற்ற வைக்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுவோம். அடுப்பை பற்ற வைக்கவேண்டும் என்பதற்காக பெரிய பெரிய கட்டைகளை கொண்டு வந்து போட்டு உடனே எரிய வைக்க முடியுமா? கட்டைகளை சரியாக பிளந்து, உலர்த்தி, ஆயத்தப்படுத்தி இருக்கவேண்டும். அதிலும் உடனே பற்றிக்கொள்ளும் வண்ணம் சிறுசிறு சுள்ளிகள், மரத்துகள்கள் போததற்கு கற்பூரமோ மண்ணெண்ணையோ உபயோகித்து விரைந்து பற்ற வைப்பது வழக்கம். பிறகு சிறு சிறு கட்டைகள் முதலில் உபயோகப்படுத்தி தீ ஏற ஏற மற்ற கட்டைகள் இப்போது அடுப்பில் வைக்கப்படுவது போல் நமது செயல்கள் அமைவது தானே முறை.
காலை வேளைகளில் யாசகம் கேட்டு வருபவர்களை நாம் அறிவோம். அவர் குரல் எங்கோ கேட்பது போல் இருக்கும். ஒருவேளை அவர் ஐந்து வீடுகள் தள்ளியோ அல்லது பக்கத்து தெருவிலோ அவர் காணப்படலாம். அதற்காக யாசகம் அளிக்க நினைப்பவர் ஓடிச்சென்று அவரை தேடிப்பிடித்து அவருக்கு தர்மம் செய்வாரா ? ஒரு வேளை அவர் அந்தவழியை கடக்க நேரிட்டாலோ அல்லது வேறு சூழ்நிலைகளால் ஒரு சில சந்தர்பங்களில் வேண்டுமானால் இது சாத்தியப்படும், எல்லா நேரங்களிலும் அல்ல.
அப்படியானால் மழை தரும் அதிகாரம் யார் கரங்களில் இருக்கிறது? மழை பெறுவதற்கான சரியான முறை என்ன என்பதை கவனத்தில் கொள்ளுவது மிக மிக அவசியமானதாகும். அல்லவென்றால் நம் முயற்சி விழலுக்கு இறைத்த நீர் போன்றே அமையும்.

உரியவரை நாடு :

நான் கர்த்தர், இது என் நாமம் ; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசாயா : 42 : 8

இது தேவன் நமக்கு சொல்லும் மிக முக்கியமான குறிப்புக்களில் ஒன்று. இந்த காரியத்தில் நாம் தவறு செய்ய முடியுமா ? அப்படியானால் அவரே சொல்லுகிறார் ; தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். ஏசாயா : 44 : 3 இந்த மகா உன்னதமான காரியத்தை இழக்க முடியுமா என்று பார்க்கவேண்டும்.
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்திரத்தைத் தண்ணீர்த் தாடகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி, கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும் யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள். ஏசாயா : 41 : 18,20

நாம் யாவரும் அவர் தான் காரணர், ஆளுகை செய்கிறவர் என்று அறியும் வேளையும் வந்தது என்பதை அறுதியிட்டுத் தீர்க்கமாய் முன் அறிவித்திருக்கிறது வேதம்.

பின் மாரிக்காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள், அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். சகரியா : 10 : 1
அவர் பள்ளத்தாக்குகளில் நீருற்றுக்களை வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும், அங்கே காட்டுக் கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும். தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்கு தண்ணீர் இறைக்கிறார். உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். சங்கிதம் : 104 : 10-14
கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின் மேல் தொனிக்கிறது. மகிமையுள்ள தேவன் முழங்குகிறார். கர்த்தர் திரளான தண்ணீர்களின் மேல் இருக்கிறார். கர்த்தர் ஜலப்பிரவாகத்தின் உட்கார்ந்திருக்கிறார்.

கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். சங்கிதம் : 29 : 3,10 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து, பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். தெற்கேயிருந்து சூறாவளியும், வட காற்றினால் குளிரும் வரும். தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார். அப்பொழுது ஜலத்தின் மேற்ப்பரப்பானது உறைந்துப்போம். யோபு : 37 : 6 , 9 – 10 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம், அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும். யோபு : 12 : 15

நாம் இது வரை மழைக்கான விதிகளையும், மழைக்கு உரியவரையும், அவரின் அதிகாரத்தையும் வல்லமை பிரஸ்தாபத்தையும் அதற்குரிய வேதாகம மெய் விளக்கத்தையும் விரிவாக பார்த்தோம். இபோதோ நாம் செய்ய தக்கதை சிந்திப்போம், செயல்படுவோம்.

நாம் உலகத்தின் போக்கை அறிவோம், இன்றைய சூழ்நிலை எவ்வாறிருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். செய்ய தகாததை விடுத்து, செய்யத் தக்கதை செய்வோமானால் நம் வாழ்வு நீடித்திருக்கும். நீதியாய் நடந்து, செம்மையானவைகளை பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதப்படிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதப்படிக்கு தன் கண்களை மூடுகிறவனெவனோ, அவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான், கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும். அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும். அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும். ஏசாயா : 33 : 15 – 16

இதுவே தேவன் நமக்கு தரும் நிச்சயம். வாழ்வாங்கு வாழுவோம், மற்றவர்களையும் வாழவைப்போம். நாம் வாழும் பூமியை பாதுகாப்போம். அப்போது பின்வரும் நம் சந்ததி நம்மை வாழ்த்தும்.
நன்றி, தேவன் உங்கள் யாவரையும் ஆசீர்வதித்து காப்பாராக , ஆமென்.

சுவி. பாபு T தாமஸ்,

இராணிப்பேட்டை

Bible Study வேத ஆராய்ச்சி News செய்திகள் spiritual news, ஆவிக்குரிய தகவல்கள் பொதுத் தகவல்கள்

புதிய தமிழக பள்ளி பாட திட்டத்தில் கிறிஸ்துவுக்கு முன் ( கி .மு ) கிறிஸ்துவுக்கு பின் ( கி .பி ) என்று வரலாற்று கால அளவு நிலையை மாற்றி பொது ஆண்டுக்குப்பின் ( பொ .ஆ .பி ) பொது ஆண்டுக்கு முன் ( பொ .ஆ .மு ) என்று குறிப்பிட்டு வெளியிட்டிருப்பது வருந்த கூடியது.

பல நூறு ஆண்டுகளாக பல் வேறு வல்லுனர்கள் சரித்திர ஆய்வாளர்கள் வரலாற்று சான்றுகள் அடிப்படையில் வழக்கத்தில் கொண்டுவந்த ஆதாரத்தை மாற்றியிருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து ஒரு மதம் சார்ந்தவரோ அல்லது ஒரு பகுதியை சார்ந்தவரோ அல்லது ஒரு பிரிவினரை சார்ந்தவரோ இலர். இயேசு கிறிஸ்துவானவர் உலக மக்களை மீட்க வந்த உலக இரட்சகர். இவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழி நடப்போரை கிறிஸ்தவர்கள் என்று சமுதாயம் தான் அடையாளப்படுத்தியது. இயேசு கிறிஸ்து சமயத்தை ஸ்தாபிக்க வந்தவரல்ல, மாறாக வழிகாட்ட வந்தார். இவர் சரித்திர நாயகர் ஆகவேதான் சரித்திர வல்லுனர்கள் சரித்திரத்தை இரண்டாக பகுத்து கிறிஸ்துவுக்கு முன் என்றும் பின் என்றும் குறித்தார்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தியை அறிவிக்கவந்த தேவதூதன் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இரவிலே தங்கள் மந்தையை காத்துக்கொண்டிருந்தபோது அவர்கள் முன் தோன்றி “ பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவிதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்றான். லூக் : 2 : 1 0 – 11.

இயேசு கிறிஸ்து வின் பிறப்பு இப் பூ உலகிற்கு நற்செய்தியாகும். அவர் உலகிற்கு ஒளியாக வந்தார். “ உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” யோவான் : 1:9.
மறு நாளிலே யோவான் இயேசு வை த் தன்னிடத்தில் வரக் கண்டு : இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி, எனக்கு பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான். யோவான் : 1 : 2 9 -3 0. என்று யோவான் ஸ்நானகன் இயேசுவை அறிமுகம் செய்தார் என்று காண்கிறோம்.
இன்னும் பிற சான்றுகளையும் பார்போம்.

குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுருபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும் கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் : 1 : 14 – 16
நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது ; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம் ; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார். – ஏசாயா : 5 3 : 5 -6

சாட்சிகள் :

சமாரியரின் சாட்சி : அந்த ஸ்திரீயை நோக்கி : உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். யோவான் : 4 : 42

இயேசு கிறிஸ்துவின் சாட்சி : அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு : 1 0 : 45
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் திர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கபடுவதற்காகவே அவரை அனுப்பினர். யோவான் : 3 : 1 7

அப்போஸ்தலர் யோவானின் சாட்சி : பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினார் என்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். I யோவான் : 4 : 14

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். I யோவான் : 2 : 2

சாட்சிகளும் சான்றுகளும் இவ்வாறிருக்க அவரை மதத்தின் பெயரால் சிறுமை படுத்துவது அடாதசெயல் ஆகும். இழைக்கப்படும் அநீதிகளுக்கு முற்று புள்ளி வைப்போம். வாழ்க வையகம், ஆமென்.

சுவி.பாபு தா தாமஸ், இராணிப்பேட்டை

Bible Study வேத ஆராய்ச்சி News செய்திகள்

“2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்”

இதில் எல் அளவும் சந்தேகம் வேண்டாம். இது உண்மை தான். அப்படி யானால் அழிவை வேடிக்கை பார்க்கலாமா ? அல்லவே அல்ல. மாறாக இதை எச்சரிக்கையாக கொள்ளவேண்டும். ஏன் சிரியா தேசம் அழியவேண்டும் என்று பார்க்கவேண்டும். அழிவிலிருந்து எப்படி சிரியா மக்களை காப்பாற்றவேண்டும் என்று பார்க்கவேண்டும். அதற்காகவே இது முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது என்று உணரவேண்டும்.

பைபிள் ஒரு மத நூல் அல்ல. கிறிஸ்துவம் ஒரு மதமும் அல்ல. மதம் என்பது ஒரு சாராரை, ஒரு பிரிவினரை அல்லது ஒரு பகுதியினரை அல்லது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். ஆனால் வேதாகமத்தில் / பைபிளில் ஆதியும் உண்டு முடிவும் உண்டு, வரும் காரியங்களும் உண்டு. உலக தோற்றமும் அதன் வளர்ச்சியும், ராஜ்ஜியங்களின் தோற்றமும் வீழ்ச்சிகளும் உண்டு. யாருக்குப்பின் யார்யார் வாழ்ந்தார்கள் என்கிற விவரங்களும் உண்டு.ஆக சரித்திரமும் பூகோளமும் நீதிசாஸ்திரங்களும், போதனைகளும், பின்னடப்பவைகளும், வாழ்க்கை நெறிகளும் அடங்கிய பைபிள் எப்படி ஒரு பிரிவினரை சார்ந்ததாக இருக்கமுடியும்.

அதேபோல கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை அல்லது கிறிஸ்துவின் போதனைகளின் படி நடப்பவர்களை குறிக்கும் சொல்லாடலாகும். இயேசு கிருஸ்து ஒரு பிரிவை சார்தவரா அல்லவே. இயேசு கிருஸ்து உலக ரட்சகர். உலகவாழ் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்கும் பொருளாய் இவுலகில் உதித்த பரம்பொருள் இயேசு கிறிஸ்துவே. ஆக இவரும் ஒரு பிரிவினருக்கு சொந்தமானவரல்ல மாறாக அனைவருக்குமானவர்.

சிரியா தேச அழிவிலிருந்து காப்பாற்ற வழியிருக்கிறது. நிச்சயம் காப்பாற்றமுடியும். அழிவை முன்னறிவித்த அதேவேதகமத்தில் அழிவிலிருந்து காக்கக்கூடிய வழியும் இருக்கிறது.

– பாபு டீ தாமஸ்

News செய்திகள்

எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்: சங்கீதம் : 122 : 6

இஸ்ரேல் தலை நகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவுக்கு உலகநாடுகள் கண்டனம். நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏன்? ஜெருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளவேண்டும். ஏன் ? உலகநாடுகள் கண்டன குரல் எழுப்பவேண்டும். இதன் ஆரம்பம் தொன்றுதொட்டு இருக்கும் தொடர்கதை. அது பெருங்க்கதை. இப்போது வேண்டாம். 1948 இஸ்ரேல் பிரகடனத்திற்கு பின் முளைத்ததுதான் இந்த தீராத பிரச்சனையின் மூலகாரணம்.

இஸ்ரேல் தலையெடுத்த மறுகணமே அதன் தலையினை கொய்ந்துவிட கூட்டணி அமைத்து எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகள் போர்தொடுக்க, விளைவு ! மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசமானது. 1948 க்கு பிறகு மீண்டும் 1967 இல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகரமாக அறிவித்தது. இங்கே தான் பிரச்சனை. ஆகாத மருமகள் மண்சட்டி உடைத்தாலும் அது பொன் சட்டி அல்லவா, இதே கதை தான் இங்கும். பொதுவாக போரில் கைப்பற்றிய இடங்கள் கைப்பற்றிய நாட்டுக்கு சொந்தம், இது தான் உலக வழக்கம். இஸ்ரேலும் அதை தான் செய்தது. நாட்டாண்மைக்காரர்கள் பொருந்தாது என்கிறார்கள். ஆகவே உலகநாடுகளுக்கு ஒத்துபோகநினைத்து ஐக்கிய நாடுகள் சபையும் மல்லுக்கு நிற்கிறது. இந்த நாட்டாண்மைக்காரர்களின் தலையே நம்ப பெரியண்ணன் அமெரிக்காதான்.

இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களுள் ஒன்று யூத, இஸ்லாமியா மற்றும் கிறிஸ்துவர்களின் பொது இடம் என்பது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இம் மூன்று பிரிவினருக்கும் ஆபிரகாம் தகப்பன். சரி இது ஒருபுறம் இருக்கட்டும். மற்றோரு காரணமாக பார்க்கப்படுவது 3 00 000 பாலஸ்தீனியர்கள். இதிலும் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த மூன்று லட்சம் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேல் குடிமக்களோ அல்லது ஜோர்டான் நாட்டு குடிமக்களோ இல்லை என்பதுதான். இவர்கள் நாடற்ற குடிகளாக இருந்தவர்கள். இப்போதும் அப்படியே தான் குடியுரிமை இல்லாதவர்களாக வாழுகிறார்கள். உலக நாடுகள் பஞ்சாயத்து செய்ய பார்க்கிறது. எதோ தம்பிரான் புண்ணியம் போல அமெரிக்க விழித்துக்கொண்டது அதன் அதிபரால்.

Evg. பாபு டீ தாமஸ்

Pray for Jerusalem’s peace.