சோம்பல் = தரித்திரம்

சோம்பலாக – வேண்டுமென்றே அதிக நேரம் தூங்குபவர்கள் அடையும் பலன் என்ன என்று வேதாகமம் நீதிமொழிகள் 6:9-11ல் கூறுகிறது. முதலாவது, தரித்திரமும் குறைவுகளும் வரும் என்று நமது வேதாகமம் எச்சரிக்கிறது.

அநேகருடைய வாழ்க்கையில் ஏழ்மையும் குறைவுகளும் இருப்பதற்கு முக்கிய காரணம் சோம்பலாகும். வாழ்க்கையில் வறுமையும் குறைவுகளும் போக
வேண்டுமானால் நாம் சோம்பலையும் நெடுந் தூக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

கிறிஸ்துவில் ஐக்கியமானவர்களே!

நம்மைச் சீர்தூக்கிப் பார்ப்போம். நம்முடைய வாழ்க்கையில் ஜெபத்திற்குப் பதிலாக தூக்கத்தையும் சோம்பலும் இருந்தால் நம் ஆவிக்குரிய வாழ்க்கையும் ஏழ்மையடையும். சோம்பலுக்கு எதிர்பதம் சுறுசுறுப்பு & ஜாக்கிரதையுள்ளவன். ஜாக்கிரதையுள்ளவன் கை ஆளுகை செய்யும். – நீதிமொழிகள் 12:24.

நாம் ஆளப் பிறந்தவர்கள். இந்த உலகத்திலும் சரி பரலோக ராஜ்யத்திலும். ஆதலால், நாம் இந்த தூக்கத்தையும் சோம்பேறித்தனத்தையும் விட்டுவிட்டால் நாம் ஆளுகை செய்பவர்களாக இருப்போம். இதற்கு நீதிமொழிகளின் ஆலோசனை நமக்கு நல் வழிகாட்டட்டும்.

சுவிசேஷகர் யோவான் காந்தி இரா
Anchor Ministries
Admin – www.tamilchristian.info
yovangandhi@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திரும்பி பார்க்காதே!...

Tue Sep 18 , 2018
அழிந்து போகிற உலகத்தை திரும்பி பார்த்த பெண் ஆதியாகமம் 19:1-&26 வரையுள்ள வசனங்களை வாசித்து தியானம் செய்வோம். லோத்து என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இங்கு குறிப்பிட்டள்ளது. இந்த லோத்து ஆபிராகமின் உறவினர். சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வந்து, அபிராம் அமைதியாக பிரிந்து போக ஆலோசனை கொடுத்தார். லோத்தும் அவரின் மனைவி மற்றும் இரண்டு குமாரத்திகளோடு சோதோம் என்ற இடத்திற்கு வந்து குடியேறுகிறார்கள். சோதோம் பார்ப்பதற்கு செல்வ செழிப்பாக […]

You May Like