Bible Study வேத ஆராய்ச்சி

  தசம பாகம்

பொருளாதாரம் செழிக்க மற்றும் ஒரு வழி. தசமபாகத்தை குறித்து தவறான கருத்துக்களை பரப்பிவிடுபவர்கள் முளைத்து உள்ளதால் அதைக் குறித்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தசமபாகம் என்பது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.  காட்டொலிவ மரமாகிய புறஜாதியாராகிய நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார்.  ஆதலால் நாமும் தசமபாகம் செலுத்தலாம்.

புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை என்று கூறுகிறார். மேலும் இயேசுகிறிஸ்து இன்னும் அதிகமாக வலியுறுத்தி நியாயப் பிரமாணத்தை கடைப்பிடிக்க சொல்லுகிறார். 

எப்படியெனில் மத்தேயு 5:21 ‘‘ கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலை செய்கிறவன்  நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்”.

அதாவது பூர்வத்தாருக்கு (கொலை விபசாரம்) செயல்களையே செய்யக் கூடாது என்று குறிப்பிடுகிறார்.  ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோ வார்த்தைகளுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் கொடுத்த கட்டளை

1. கொலை செய்யக் கூடாது (யாத். 20, மத்.5:21)

2. விபசாரம் செய்யாமல் இருப்பாயாக (மத்.5:27)

3. சத்தியம், பொய்யாணை இடாமல் உன் ஆணைகளை கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக (மத்.5:33)

4. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்

இயேசு அதற்கு மேலும் வலியுறுத்தி சொல்லுவது

கொலையும் செய்யக் கூடாது, சகோதரனை மூடன் என்று சொல்லக் கூடாது, வீணன் என்று சொல்லக்கூடாது.

விபச்சாரம் செய்யக்கூடாது …. பெண்ணை இச்சையினாலும் பார்க்கக்கூடாது.

சத்தியம் பண்ண வேண்டாம்…. உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும்.

தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். (மத்.39)

இயேசு வலியுறுத்துகிற காரியம்

செய்கையில் மட்டுமல்ல…. வார்த்தைகளையும் நாம் காக்க வேண்டும்.

பார்வையில் சுத்தமாக இருக்க வேண்டும்.

வார்த்தையை காக்க வேண்டும்.

நல்நடக்கையை காத்து கொள்ள வேண்டும்.

பரிசேயர் சதுசேயர் செய்தது

1.(மத்.6:1) ஆலயங்களிலும் வீதிகளிலும் தர்மம் செய்தது. (மத். 6:3)

2.மனுஷர் காண வேண்டும் என்று செய்வது.

3.மனுஷர் காணும்படியாக ஜெப ஆலயத்திலும், வீதிகளின் சந்துகளிலும் ஜெபம் பண்ணினார்கள்.

3  ஜெபம் பண்ணும்போது அதிக வசனங்கள் வேண்டாம்.

4. உபவாசிக்கும்போது முகவாடலாய் இருந்து மற்றவர்கள் நான் உபவாசிக்கிறேன் என்று காட்டுவது. (மத்.6:16)

மேலும் பழைய ஏற்பாட்டுமக்களுக்காக கூறப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கு பழைய ஏற்ப்பாட்டின் விசுவாசிகளை விட கூடுதலாக செய்ய வாக்கிலும், நடக்கையிலும், எண்ணத்திலும் நம் ஆண்டவர் நன்மை செய்ய அழைக்கிறார்.

நீயோ தர்மம் செய்யும் போது வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது.

காணிக்கை செலுத்தும் போது சகோதரனுடன் ஒப்புரவாக வேண்டும். (மத்.5:25)

வீட்டுக்குள் சென்று அந்தரங்கத்தில் உள்ள பிதாவுக்கு மட்டும் தெரியவேண்டும்.

வீண் வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம்.

அந்தரங்கத்தில் பிதா காணும்படி உபவாசிக்க வேண்டும். ஆதலால் தலைக்கு எண்ணெய் பூசி, முகத்தை கழுவ வேண்டும்.

அந்தரங்கமாக தர்மம் செய்ய வேண்டும்

நல்மனத்துடனே பாவம் இல்லாமல் ஒப்புரவாகுதலுடன் காணிக்கை செலுத்த வேண்டும்.

மறைமுகமாக ஜெபித்து வல்லமை பெற வேண்டும்.

நம் தேவைகளை தேவன் அறிந்ததினால் சுருக்கமாக தெரிவிக்க வேண்டுகிறார்.

உபவாசிக்கும் போது மிகுந்த உற்சாகமாக இருக்க வேண்டும்.

இங்கும் அந்தரங்கத்தில் பார்க்கிற தேவனுக்கே உபவாசம் இருக்க வேண்டும்.

  • இரா யோவான்காந்தி
Yovan
R. Yovan Gandhi, Evangelist, live in Chennai, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *