Lyrics and Tune – Samraj Hopper
Featuring – Rachel and Keerthana
Chord: E-Major
12.12.2016 அன்று சென்னையை “வார்தா” என்ற பயங்கர புயல் தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில், காலை 11.30 மணியளவில் எங்கள் இல்லத்தில் அன்பின் ஆண்டவர் சமூகத்தில் செலவிட்ட இனிய நேரத்தில் இந்த பாடல் பிறந்தது. பரிசுத்த வேதாகமத்தில் மறுரூப மலையின் சம்பவத்தை மையமாக வைத்து இப்பாடல் எழுதப்பட்டது.
உம் பிரசன்னமே, என் வாஞ்சையே
உம் சமூகமே, என் தாகமே
உம்மைத் தேடி வந்தேன், நாடி வந்தேன்
உம்மோடு வாழ்ந்திட ஏங்குகிறேன்
1) மறுரூபமாக்கிடும் அனுதினமே
உம் வசனத்தின் வெளிச்சத்தில் நடந்திடுவேன்
மெய்யான திராட்சைச் செடியின் கொடிபோல்
உம்மோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன்
2) மகிமையின் மேகம் நிழலிடட்டும்
மறுரூப அனுபவம் தொடங்கிடட்டும்
நேசக்குமாரன் இயேசுவுக்கு
செவிகொடுத்திட என்னை வழிநடத்தும்
3) மோசே, எலியா போல் என்னையுமே
உம் சித்தம் செய்திட பெலப்படுத்தும்
இருளில் வாழ்வோர் ஒளி கண்டிட
என்னையும் தேவா பயன்படுத்தும்
சாம்ராஜ் ஹாப்பர்
Teaching & Training Mission